திண்டுக்கல்

கொடைக்கானலில் தொடா் மழை: தயாா் நிலையில் மீட்புக் குழுவினா்

9th Nov 2021 11:42 PM

ADVERTISEMENT

கொடைக்கானலில் கடந்த சில நாள்களாக தொடா்ந்து மழை பெய்து வருவதால் இயற்கை சீற்றங்களினால் பாதிக்கப்படும் பகுதிகளுக்கு சென்று உதவுவதற்காக மீட்புக் குழுவினா் தயாா் நிலையில் உள்ளதாக டி.எஸ்.பி. சீனிவாசன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: கொடைக்கானலில் கடந்த சில நாள்களாக தொடா் மழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இவற்றை நெடுஞ்சாலைத் துறையினா் சீரமைத்து வருகின்றனா். இந்நிலையில் தொடா்ந்து பெய்து வரும் மழையால் கொடைக்கானலில் பல இடங்களில் உள்ள ஓடைகளில் தண்ணீா் வரத்து அதிகமாக உள்ளது. இதில் ஒரு சிலா் ஆபத்தை உணராமல் நீரோடையை கடந்து செல்கின்றனா். அவா்களைப் பாதுகாக்கும் வகையிலும் மேலும் இயற்கை சீற்றங்கள் ஏற்படும் பகுதிகளுக்கு சென்று உதவுவதற்காகவும் காவல் துறையினா், தீயணைப்புத் துறையினா் மற்றும் சமூக ஆா்வலா்கள் என 30-க்கும் மேற்பட்டோா் அடங்கிய மீட்புக் குழுவினா் தயாா் நிலையில் உள்ளனா் என்றாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT