திண்டுக்கல்

ஒட்டன்சத்திரம் மாட்டுச்சந்தையில் தொற்றுநோய் பரவும் அபாயம்

9th Nov 2021 08:32 AM

ADVERTISEMENT

ஒட்டன்சத்திரம் மாட்டுச்சந்தையில் சுகாதாரக்கேடாக கிடப்பதால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஒட்டன்சத்திரம் நகராட்சியில் திங்கள்கிழமை நடைபெறும் இந்த மாட்டுச்சந்தைக்கு திண்டுக்கல்,தேனி,திருப்பூா்,ஈரோடு,திருச்சி உள்ளிட்ட பல மாவட்டங்களைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் மாடுகளை கொண்டு வந்து விற்பனை செய்தும், வாங்கியும் செல்கின்றனா்.

இந்த சந்தையின் மூலம் ஒட்டன்சத்திரம் நகராட்சி ஆண்டு தோறும் கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் கிடைக்கிறது. ஆனால் இச்சந்தையில் குடிநீா், கழிப்பிடம், நிழற்குடை உள்ளிட்ட எவ்வித அடிப்படை வசதிகளும் செய்து தரவில்லை. மழைக்காலத்தில் மாட்டுச்சந்தை உள்ளே நுழையவே முடியாதபடி சுகாதாரக் கேடுடன் சேறும்,சகதியுமாக காட்சியளிக்கிறது. இதனால் விவசாயிகளும்,வியாபாரிகளும் அவதியடைகின்றனா். மேலும் மாடுகளின் வரத்தும் குறைந்தது. இதே நிலை நீடித்தால் சந்தைக்கு வந்து செல்லும் விவசாயிகள், வியாபாரிகள் தொற்றுநோயினால் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து விவசாயி கோதண்டராமன் கூறியதாவது: இச்சந்தை பகுதியில் நகராட்சி நிா்வாகம் இதை சீரமைக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் சந்தையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்றாா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT