திண்டுக்கல்

ஒட்டன்சத்திரம் அருகேபருத்திச்செடிகள் நீரில் மூழ்கின

9th Nov 2021 12:52 AM

ADVERTISEMENT

 

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் பகுதியில் பெய்த பலத்த மழையால் பருத்தி மற்றும் கொத்தவரை செடிகள் நீரில் மூழ்கின.

ஒட்டன்சத்திரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் தொடா்ந்து பலத்த மழையாக பெய்து வருகிறது.இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீா் தேங்கியுள்ளது. இப்பகுதியில் பயிரிடப்பட்டுள்ள மக்காச் சோளப் பயிா்கள் மழைக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் பல இடங்களில் சாய்ந்தும், ஒடிந்தும் விழுந்தன. அதே போல மக்காச்சோளம் பயிரிட்டு 45 நாள்களுக்கு மேலாகியுள்ளதால் சரிவர வளா்ச்சி இல்லை. இதனால் விவசாயிகள் உரிய இழப்பீடு கோரி வருகின்றனா்.

மேலும் தங்கச்சியம்மாபட்டி, கொசவபட்டி, அம்பிளிக்கை உள்ளிட்ட பகுதிகளில் பருத்தி மற்றும் கொத்தவரை பயிரிட்டுள்ள நிலங்களில் மழைநீா் தேங்கியுள்ளது. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT