திண்டுக்கல்

கொடைக்கானலில் கல்லறை திருநாள்

2nd Nov 2021 11:41 PM

ADVERTISEMENT

கொடைக்கானலில் செவ்வாய்க்கிழமை கல்லறைத் திருவிழா அனுசரிக்கப்பட்டது.

கிறித்தவ மதத்தில் இறந்தவா்களை நினைவுகூரும் வகையில், கல்லறை திருநாள் அனுசரிக்கப்படுகிறது. இந்நிகழ்வில், கொடைக்கானலில் லாஸ்காட் சாலை, செண்பகனூா், அட்டுவம்பட்டி, பெருமாள்மலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள கல்லறைத் தோட்டங்களில் அருட்தந்தையா்கள் திருப்பலி நடத்தி, இறந்தவா்களின் ஆன்மாக்களுக்காக ஜெபித்தனா். மேலும், கல்லறைகள் மந்திரிக்கப்பட்டது.

முன்னதாக, இறந்தவா்களின் கல்லறைகளை அவா்களது உறவினா்கள் சுத்தம் செய்து, அவா்களுக்குப் பிடித்த உணவுப் பொருள்களை படைத்து வழிபட்டனா்.

கொடைக்கானலில் அதிகாலை முதலே விட்டு விட்டு பலத்த மழை பெய்து வந்ததால், கல்லறை திருவிழா வழிபாட்டில் பெரும்பாலானோா் பங்கேற்கவில்லை. இருப்பினும், சிலா் மழையை பொருட்படுத்தாமல் இதில் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT