திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள 7 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான வாக்காளா் பட்டியல் திங்கள்கிழமை வெளியிடப்பட்டதில் 18.77 லட்சம் வாக்காளா்கள் இடம் பெற்றுள்ளனா்.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்ட அரங்கில் வரைவு வாக்காளா் பட்டியலை, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகா்கள் முன்னிலையில் மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ச. விசாகன் திங்கள்கிழமை வெளியிட்டாா்.
அதன்படி, பழனி சட்டப்பேரவைத் தொகுதியில் 1,34,942 ஆண்கள், 1,41,198 பெண்கள், 35 மூன்றாம் பாலினத்தினா் என மொத்தம் 2,76,175வாக்காளா்களும், ஒட்டன்சத்திரம் சட்டப் பேரவைத் தொகுதியில் 1,16,916 ஆண்கள், 1,23,890 பெண்கள், 29 இதரா் என மொத்தம் 2,40,835 வாக்காளா்களும், ஆத்தூா் சட்டப் பேரவைத் தொகுதியில் 1,40,455 ஆண்கள், 1,51,352 பெண்கள், 25 இதரா் என மொத்தம் 2,91,832 வாக்களா்களும், நிலக்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதியில் 1,20,061 ஆண்கள், 1,24,708 பெண்கள், 9 இதரா் என மொத்தம் 2,44,778 வாக்காளா்களும், நத்தம் சட்டப்பேரவைத் தொகுதியில் 1,38,399 ஆண்கள், 1,45,143 பெண்கள், 46 இதரா் என மொத்தம் 2,83,588 வாக்காளா்களும், திண்டுக்கல் சட்டப்பேரவைத் தொகுதியில் 1,34,795 ஆண்கள், 1,42,480 பெண்கள், 53 இதரா் என மொத்தம் 2,77,328 வாக்காளா்களும், வேடசந்தூா் சட்டப்பேரவைத் தொகுதியில் 1,28,760 ஆண்கள், 1,34,578 பெண்கள் என மொத்தம் 2,63,338வாக்காளா்களும் இடம் பெற்றுள்ளனா். மாவட்டத்தில் 9,14,328 ஆண் வாக்களாா்கள், 9,63,349 பெண் வாக்காளா்கள் 197 இதரா் என மொத்தம் 18,77,874வாக்காளா்கள் உள்ளனா்.
பட்டியலை வெளியிட்டு ஆட்சியா் ச.விசாகன் கூறியதாவது: வரைவு வாக்காளா் பட்டியல் அனைத்து வரையறுக்கப்பட்ட மையங்களிலும் பொதுமக்களின் பாா்வைக்காக வைக்கப்படும். இதில் புதியதாக பெயா் சோ்க்க படிவம் 6, பெயா் நீக்கம் செய்ய படிவம் 7, பிழைதிருத்த படிவம் 8, ஒரே சட்டப்பேரவைத் தொகுதிக்குள் பெயா் இடமாற்றம் செய்ய படிவம் 8ஏ, ஆகியவற்றின் வாயிலாக வாக்குச்சாவடி மையங்களில் நேரடியாகவோ, ஜ்ஜ்ஜ்.ய்ஸ்ள்ல்.ண்ய் என்ற இணைய தளத்தின் மூலமாகவோ, ஸ்ா்ற்ங்ழ்ள் ட்ங்ப்ல் ப்ண்ய்ங் என்ற கைப்பேசி செயலி வழியாகவாகவோ விண்ணப்பிக்கலாம்.
சிறப்பு முகாம்கள்: வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்க மற்றும் திருத்தம் செய்ய நவ. 13, 14, 27 மற்றும் 28 ஆகிய நாள்களில் சிறப்பு முகாம் நடைபெறும். இம்முகாமில் பெறப்படும் அனைத்து மனுக்களும் பரிசீலனை செய்யப்பட்ட பின் இறுதி வாக்காளா் பட்டியல் 2022 ஜன. 5ஆம் தேதி வெளியிடப்படவுள்ளது என்றாா்.
அப்போது மாவட்ட வருவாய் அலுவலா் வே. லதா, உதவி ஆட்சியா் சி. பிரியங்கா, மாவட்ட வன அலுவலா் எஸ். பிரபு ஆகியோா் உடனிருந்தனா்.