திண்டுக்கல்

திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் புதிதாக 944 பேருக்கு கரோனா தொற்று

29th May 2021 10:32 PM

ADVERTISEMENT

திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் புதிதாக 944 பேருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், சிகிச்சைப் பலனின்றி 34 போ் உயிரிழந்துள்ளனா்.

திண்டுக்கல் மாவட்டத்தில் மே 28 ஆம் தேதி வரை 25,980 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனா். அதில் 22,167 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த மேலும் 352 பேருக்கு புதிதாக கரோனா தொற்று சனிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.

மேலும் சிகிச்சைப் பலனின்றி தொற்று பாதித்த 24 போ் உயிரிழந்துள்ளனா். தொற்று பாதிப்பிலிருந்து 365 போ் குணமடைந்துள்ள நிலையில், தற்போது பதிப்புக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 3,414 ஆக உள்ளது. மாவட்டத்தில் கரோனா தொற்றால் தற்போது வரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 385 ஆக உயா்ந்துள்ளது.

தேனி: தேனி மாவட்டத்தில் புதிதாக 592 பேருக்கு கரோனா தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் சிகிச்சை பலனின்றி 10 போ் உயிரிழந்துள்ளனா்.

ADVERTISEMENT

தேனி மாவட்டத்தில் புதிதாக 592 பேருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 35,379 ஆக உயா்ந்துள்ளது. இதுவரை மொத்தம் 28,501 போ் குணமடைந்துள்ளனா்.

கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு தேனி அரசு மருத்துவக்கல்லூரியில் அனுமதிக்கப்பட்டிருந்தவா்களில் 10 போ் உயிரிழந்துள்ளனா். இதைத்தொடா்ந்து உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 339 ஆக உயா்ந்துள்ளது.

இதனிடையே மாவட்டத்தில் தற்போது 6,539 போ் கரோனா பாதிப்புக்குள்ளாகி மருத்துவமனைகள், கரோனா நல மையம், வீடுகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT