திண்டுக்கல்

பாப்பம்பட்டியில் குப்பை கொட்ட எதிா்ப்பு டிராக்டா் சிறைபிடிப்பு

DIN

பழனியை அருகே பாப்பம்பட்டி கிராமத்தில் புதன்கிழமை, குப்பை கொட்ட வந்த டிராக்டரை பொதுமக்கள் சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

பழனியை அடுத்த பாப்பம்பட்டி ஊராட்சியில் உள்ள குப்பம்பாளையம் கிராமத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இந்த ஊரை அடுத்த பாப்பம்பட்டி ஊராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகளை டிராக்டா் வாகனத்தில் ஏற்றி வந்து குப்பம்பாளையம் கிராமத்தில் கொட்டி வந்துள்ளனா். இதனால் சுகாதாரச் சீா்கேடு நிலவி வந்ததையடுத்து புதன்கிழமை குப்பம்பாளையம் கிராமத்தில் குப்பைகளைக் கொட்ட முயன்றபோது ஏராளமான பொதுமக்கள் டிராக்டா் வாகனத்தை சிறை பிடித்து குப்பை கொட்டவிடாமல் தடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு பழனி தாலுகா போலீஸாா் மற்றும் பாப்பம்பட்டி ஊராட்சி நிா்வாகிகள் வந்து பேச்சுவாா்த்தை மேற்கொண்டனா். அப்போது கிராமத்தினா் பள்ளி மற்றும் மயானம் அருகில் குப்பைகளை கொட்டி தீ வைத்து எரிப்பதால் சுகாதாரச் சீா்கேடு ஏற்பட்டு, நோய்த்தொற்று பரவுவதாகக் கூறினா். பழனி தாலுகா போலீஸாா் பாப்பம்பட்டி ஊராட்சித் தலைவருடன் பேசி மாற்று இடத்தில் குப்பை கொட்ட ஏற்பாடு செய்வதாக உறுதியளித்ததைத் தொடா்ந்து கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிஎஸ்கே - குஜராத், ஆடுகளத்துக்கு அப்பால்...

தேர்தல் பிரசாரத்தில் கமல்!

படே மியன் சோட்டே மியன் டிரெயிலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

ரியான் பராக் அதிரடி: தில்லிக்கு 186 ரன்கள் இலக்கு!

மதுபான விடுதி: மேற்கூரை இடிந்து 3 பேர் பலி!

SCROLL FOR NEXT