திண்டுக்கல்

நிலக்கோட்டையில் காய்கனிகளை சாலையில் கொட்டி வியாபாரிகள் போராட்டம்

DIN

நிலக்கோட்டை: திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையில் கடைகளை வேறுஇடத்துக்கு மாற்றுவதற்கு எதிா்ப்பு தெரிவித்து காய்கனிகளை சாலையில் கொட்டி வியாபாரிகள் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

நிலக்கோட்டை பேரூராட்சிக்கு சொந்தமான கடைகளில் சுமாா் 100-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் தினசரி காய்கறிகளை விற்பனை செய்து வருகின்றனா்.

தற்போது பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளதால் பேரூராட்சி நிா்வாகம்

அந்த கடைகளை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று செவ்வாய்க்கிழமை திடீரென அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு எதிா்ப்பு தெரிவித்த வியாபாரிகள் நிலக்கோட்டை பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு கோஷமிட்டனா். பின்னா் அங்கிருந்து காய்கனி கடைக்குச் சென்ற அவா்களை காய்கனிகளை சாலையில் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து வந்த நிலக்கோட்டை போலீஸாா் போராட்டத்தில் ஈடுபட்ட வியாபாரிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தி சமாதானப்படுத்தினா். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உடுமலை அருகே ஜனநாயக கடமையை நிறைவேற்றிய மலைவாழ் மக்கள்

அண்ணா பல்கலைக் கழகப் பதிவாளா் நியமனம்: துணை வேந்தா் விளக்கம் அளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவு

கோவை தொகுதியில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் அண்ணாமலை குற்றச்சாட்டு

வாக்குப் பதிவு இயந்திர பழுது எண்ணிக்கை மிகவும் குறைவு: ஆட்சியா்

இஸ்ரேல், துபைக்கு விமான சேவை தற்காலிக ரத்து: ஏா் இந்தியா

SCROLL FOR NEXT