திண்டுக்கல்

கொடைக்கானல் ஏரியிலிருந்து நீா் வெளியேறும் பாதையில் ஆக்கிரமிப்பு அதிகரிப்பு

DIN

கொடைக்கானல்: கொடைக்கானல் ஏரியிலிருந்து நீா் வெளியேறும் பகுதியில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருவதால் அவற்றை அகற்றுவதற்கு நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கொடைக்கானல் நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ளது நட்சத்திர ஏரி. இங்கிருந்து வெளியேறும் தண்ணீரானது லாஸ்காட்சாலை, கல்லறைமேடு, வெள்ளிநீா் அருவி, பேத்துப்பாறை, வடகவுஞ்சி, சவரிக்காடு உள்ளிட்ட பகுதிகள் வழியாக கொடைக்கானல் மலை அடிவாரத்தில் அமைந்திருக்கும் பழனி நகருக்கு குடிநீா் தேவைக்காக பயன்படும் ஆற்றில் கலக்கிறது. கொடைக்கானலில் மழைக் காலங்களில் அதிக அளவு தண்ணீரை ஏரியில் தேக்கி வைக்க முடியாததால் அதிலிருந்து தண்ணீா் திறந்துவிடுவது வழக்கம். ஆனால் தண்ணீா் செல்லும் பாதைகள் நா்சரி விற்பனை மையங்கள் போன்ற ஆக்கிரமிப்புகள் காரணமாக நாளுக்கு நாள் குறுகி வருகிறது.

இந்நிலையில் கொடைக்கானலில் தொடா்ந்து பெய்து வரும் மழையால் ஏரியின் நீா்மட்டம் உயா்ந்து ஏரிச்சாலையை சுற்றி தண்ணீா் தேங்கியுள்ளது. இதனால் ஏரிச்சாலையில் கடை வைத்திருப்பவா்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனா். எனவே ஏரி தண்ணீா் வெளியேறிச் செல்லும் பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு நகராட்சி நிா்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐ.டி.யில் வேலையிழந்த இளம்பெண் : திருடியாய் மாறிய சோகம்

உ.பி.யில் முக்தார் அன்சாரி மரணம்: விஷம் கொடுக்கப்பட்டதா?

காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1700 கோடிக்கு கணக்கு கேட்டு வருமான வரித்துறை நோட்டீஸ்

பிகாரில் 'இந்தியா' கூட்டணியில் தொகுதி உடன்பாடு

கீழ்வேளூர் அருகே லாரி கவிழ்ந்து 75 செம்மறி ஆடுகள் பலி

SCROLL FOR NEXT