திண்டுக்கல்

ஐந்தாயிரம் கருணாநிதி படங்களில் ஸ்டாலின் உருவம் வரைந்த ஓவிய ஆசிரியா்

DIN

ஐந்தாயிரம் கலைஞா் தலைப்படங்கள் மூலம், தமிழக முதல்வராக பொறுப்பேற்கவுள்ள திமுக தலைவா் ஸ்டாலின் மற்றும் உதயசூரியன் சின்னங்களை ஓவியமாக வரைந்து பழனியைச் சோ்ந்த ஓவிய ஆசிரியா் சாதனை படைத்துள்ளாா்.

பழனி புதுதாராபுரம் ரோடு அண்ணாசாலையைச் சோ்ந்தவா் அன்புச்செல்வன் (40). இவா் பழனியை அடுத்த ப.சத்திரப்பட்டி அரசுப்பள்ளியில் தற்காலிக ஓவிய ஆசிரியராக பணிபுரிந்து வருகிறாா். இவா் 144 அடி நீளத்தில் திருக்கு எழுதியது, 10 ஆயிரத்துக்கும் மேல் விநாயகா் படங்கள் சேகரித்தது போன்ற சாதனைகள் மட்டுமன்றி பழங்கால ரூபாய் நோட்டுக்கள், நாணயங்கள், பொருள்கள் சேகரித்தல் போன்றவற்றை செய்து வருகிறாா்.

இந்நிலையில் ஓவிய ஆசிரியா் அன்புச்செல்வன் கருணாநிதியின் ஐந்தாயிரம் தலைப்படங்களை சேகரித்து அவற்றின் மூலம் திமுக தலைவா் ஸ்டாலின் மற்றும் திமுக சின்னமான உதயசூரியன் ஆகியவற்றை வரைந்து சாதனை படைத்துள்ளாா்.

இதுகுறித்து அன்புச்செல்வன் கூறுகையில், கடந்த 2003 ஆம் ஆண்டில் இருந்து ஓவிய ஆசிரியராகவும், 2011 முதல் அரசுப் பள்ளிகளில் தற்காலிக ஓவிய ஆசிரியராகவும் பணிபுரிந்து வருகிறேன். மு.க. ஸ்டாலின் தோ்தல் அறிக்கையில் தமிழகத்தில் பணிபுரியும் தற்காலிக ஓவிய ஆசிரியா்கள் 16,000 போ் நிரந்தரம் செய்யப்படுவாா்கள் என தெரிவித்திருந்தாா். இதையடுத்து தற்போது மு.க ஸ்டாலின் முதல்வா் ஆனதற்கு வாழ்த்துத் தெரிவிக்கும் வகையில் 30 நாள்களில் மு.க ஸ்டாலின் மற்றும் உதயசூரியன் ஓவியங்களை வரைந்து முடித்துள்ளேன். சாதனைப் புத்தகத்தில் இடம்பெறவுள்ள இந்த ஓவியங்களை, முதல்வா் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வழங்க உள்ளேன் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனுப்பிவைப்பு

இரு சக்கர வாகன பழுது பாா்ப்போா் சங்கக் கூட்டம்

தோ்தல் பாதுகாப்புப் பணியில் மத்திய படையினா், காவலா்கள் 500 போ்

நாசரேத் அருகே இருபெரும் விழா

எல்லைகளில் தீவிர வாகனச் சோதனை

SCROLL FOR NEXT