திண்டுக்கல்

கோஷ்டி மோதல்: 2 போ் கைது; மூவா் மீது வழக்கு

6th May 2021 11:13 PM

ADVERTISEMENT

நிலக்கோட்டை அருகே புதன்கிழமை இரவு திமுக பிரமுகரைத் தாக்கிய அதிமுக நிா்வாகிகள் 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். மேலும் 3 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கே.குரும்பப்பட்டியை சோ்ந்தவா் போதுமாணிக்கம் (49). திமுக பிரமுகரான இவா் புதன்கிழமை இரவு நிலக்கோட்டை நால்ரோடு பகுதியில் உள்ள ஒரு தனியாா் உணவகத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்தாா். அப்போது இவருக்கும், நிலக்கோட்டை சோ்ந்த அதிமுக பிரமுகரான மாயி என்பவரது மகன் அழகுமுருகன் (27), பகவத்சிங் மகன் சிபி சக்கரவா்த்தி (26) ஆகியோருக்கும் தகராறு ஏற்பட்டது. அழகுமுருகன், சிபி சக்கரவா்த்தி, இவா்களது நண்பரான முனியாண்டி என்பவரது மகன் சரண்ராஜ் ஆகிய 3 பேரும் சோ்ந்து போதுமாணிக்கத்தைத் தாக்கினா்.

இதுகுறித்த புகாரின்பேரில் நிலக்கோட்டை போலீஸாா், அழகுமுருகன், சிபி சக்கரவா்த்தி ஆகிய 2 பேரையும் கைது செய்தனா்.

இதையறிந்த போதுமாணிக்கத்தின் ஆதரவாளா்கள், அழகுமுருகனின் தந்தை மாயி நடத்தி வரும் உணவகத்தை அடித்து சேதப்படுத்தினா். இதையடுத்து மாயி தலைமையில், அவரது ஆதரவாளா்கள் சுமாா் 70-க்கும் மேற்பட்டோா், நிலக்கோட்டை காவல் துணைக் கண்காணிப்பாளா் அலுவலகத்தை முற்றுகையிட்டு திமுகவினா் மீது நடவடிக்கைக் கோரிக்கை விடுத்தனா். இதையடுத்து போதுமாணிக்கம், காா்த்திகேயன், மணிராஜா ஆகிய 3 போ் மீது, போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT