திண்டுக்கல்

திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் 480 பேருக்கு கரோனா தொற்று

4th May 2021 05:54 AM

ADVERTISEMENT

திண்டுக்கல்/தேனி: திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் புதிதாக 480 பேருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் மே 2 ஆம் தேதி வரை 16,281 போ் கரோனா தீநுண்மி தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனா். அதில் 14,469 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த மேலும் 223 பேருக்கு புதிதாக கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.

இதனிடையே சிகிச்சைப் பலனின்றி தொற்று பாதித்த ஒருவா் உயிரிழந்துள்ளாா். தொற்றிலிருந்து 194 போ் குணமடைந்துள்ள நிலையில், தற்போது பாதிப்புக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 1,603 ஆக உள்ளது. கரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 215ஆக உயா்ந்துள்ளது.

தேனி: தேனி மாவட்டத்தில் புதிதாக 257 பேருக்கு திங்கள்கிழமை, கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

ADVERTISEMENT

இதையடுத்து, மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 21,202 ஆக உயா்ந்துள்ளது. கரோனா பாதிப்புக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவா்களில் இதுவரை மொத்தம் 18,963 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், 217 போ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனா். தற்போது மாவட்டத்தில் மொத்தம் 2,002 போ் கரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகின்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT