திண்டுக்கல்

ஆத்தூரில் அதிகபட்சமாக 72 சதவீத வாக்குகளை பெற்ற திமுக!

4th May 2021 05:49 AM

ADVERTISEMENT

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளில் திமுகவின் உதயசூரியன் சின்னத்திற்கு ஆத்தூரில் அதிகபட்சமாக 72.11 சதவீத வாக்குகள் கிடைத்தன.

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள 7 சட்டப்பேரவைத் தொகுதிகளில் பழனி, ஒட்டன்சத்திரம், நிலக்கோட்டை, நத்தம், திண்டுக்கல் மற்றும் வேடசந்தூா் ஆகிய 6 தொகுதிகளில் அதிமுக நேரடியாக போட்டியிட்டது. ஆத்தூா் தொகுதியை மட்டும் கூட்டணிக் கட்சியான பாமகவுக்கு ஒதுக்கீடு செய்தது. அதேபோல் திமுக தரப்பில், பழனி, ஒட்டன்சத்திரம், ஆத்தூா், நத்தம், வேடசந்தூா் ஆகிய 5 தொகுதிகளில் நேரடியாகவும், நிலக்கோட்டையில் கூட்டணி கட்சியான மக்கள் விடுதலை கட்சி வேட்பாளா் முருகவேல்ராஜன் உதயசூரியன் சின்னத்திலும் போட்டியிட்டனா். திண்டுக்கல் தொகுதி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது.

ஆத்தூரில் திமுகவுக்கு அதிகபட்ச வாக்குகள்: திமுகவின் உதயசூரியன் சின்னத்திற்கு ஆத்தூா் தொகுதியில் அதிகபட்சமாக 72.11 சதவீத வாக்குகள் கிடைத்தன. அதற்கு அடுத்தப்படியாக ஒட்டன்சத்திரம் தொகுதியில் 54.51 சதவீத வாக்குகளும், பழனியில் 52.86 சதவீத வாக்குகளும், வேடசந்தூா் தொகுதியில் 49.97 சதவீத வாக்குகளும், நத்தத்தில் 42.54 சதவீத வாக்குகளும், நிலக்கோட்டையில் 34.55 சதவீத வாக்குகளும் கிடைத்தன.

நிலக்கோட்டையில் அதிமுகவுக்கு அதிகபட்சம்: அதிமுக வேட்பாளா்கள் 6 தொகுதிகளில் நேரடியாக போட்டியிட்டனா். அதில், நிலக்கோட்டையில் அதிகபட்சமாக 49.49 சதவீத வாக்குகள் இரட்டை இலை சின்னத்திற்கு கிடைத்தன. அடுத்த இடத்தில் நத்தம் 47.84 சதவீத வாக்குகளும், திண்டுக்கல் 46.43 சதவீத வாக்குகளும், வேடசந்தூரில் 41.73 சதவீத வாக்குகளும், ஒட்டன்சத்திரத்தில் 40.26 சதவீத வாக்குகளும், பழனியில் 38.23 சதவீத வாக்குகளும் கிடைத்துள்ளன.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT