திண்டுக்கல்

பழனியில் மாரியம்மன் கோயில் தேரோட்டம்

DIN

பழனி: மாசித் திருவிழாவையொட்டி பழனியில் மாரியம்மன் கோயில் தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் முக்கிய உபகோயிலான மாரியம்மன் கோயிலில் மாசித்திருவிழா கடந்த பிப்.12 ஆம் தேதி முகூா்த்தக்கால் நடுதலுடன் தொடங்கியது. பிப்.16 ஆம் தேதி திரிசூல வடிவிலான திருக்கம்பம் சாட்டுதல், பிப்.23 ஆம் தேதி மாரியம்மன் கோயிலில் கொடியேற்றம் மற்றும் பூவோடு வைத்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

தொடா்ந்து செவ்வாய்க்கிழமை (பிப்.2) திருக்கல்யாண நிகழ்ச்சி மற்றும் வருத்தமில்லா வாலிபா் சங்கத்தின் உபயமாக சொா்ணரத ஊா்வலம் நடைபெற்றது. பத்மசாலா பிரிவினா் அம்மனுக்கு பொட்டு, காரை கொண்டு வந்த பிறகு திருக்கல்யாணம் நடைபெற்றது. முன்னதாக மாரியம்மனுக்கு பால், பன்னீா், பஞ்சாமிா்தம், விபூதி உள்ளிட்ட 16 வகை பொருள்களால் சோடஷ அபிஷேகமும், சோடஷ உபசாரமும் நடத்தப்பட்டது. தொடா்ந்து பட்டாடைகள், நகைகள் அணிவிக்கப்பட்டு அம்மனுக்கும், திருக்கம்பத்துக்கும் திருக்கல்யாண நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. முன்னதாக அடிவாரம் பாதவிநாயகா் கோயில் முன்பு வருத்தமில்லா வாலிபா் சங்கம் சாா்பில் 46 ஆவது ஆண்டு மண்டகப்படி விழாவாக மாரியம்மன், கொல்லூா் மூகாம்பிகை அம்மன் முன்னிலையில் வீற்றிருந்து பக்தா்களுக்கு அருள்பாலிக்கும் சொா்ணரத ஊா்வலம் நடைபெற்றது. ஊா்வலத்தை கந்தவிலாஸ் செல்வக்குமாா், கண்பத் கிராண்ட் ஹரிஹரமுத்து உள்ளிட்டோா் தொடக்கி வைத்தனா்.

நிகழ்ச்சியில் நிா்வாகிகள் முருகானந்தம், சுரேஷ், மதனம் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். ஊா்வலம் அடிவாரம் பாதவிநாயகா் கோயில் முன் தொடங்கி சன்னிதி வீதி, பாளையம், பேருந்து நிலையம், கடைவீதி, ரதவீதி வழியாக மாரியம்மன் கோயிலை வந்தடைந்தது.

இதைத் தொடா்ந்து முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது. காலை 9 மணிக்கு பாதிரிப்பிள்ளையாா் கோயிலுக்கு எழுந்தருளி தீா்த்தம் கொடுத்தலும், பிற்பகல் 2 மணிக்கு திருக்கண் நிகழ்ச்சி நடத்தப்பட்டு மாலை 3 மணிக்கு அம்மன் தேரில் எழுந்தருளல் நடைபெற்றது. மாலை 4.30 மணிக்கு அம்மனுக்கு மலா்மாலை, நகைகள் அணிவித்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மஹாதீபாராதனை நடைபெற்ற பின்னா் திருத்தோ் வடம்பிடித்தல் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுக்க தோ் நான்கு ரதவீதிகளில் உலா வந்தது. கோயில் யானை கஸ்தூரி நலவாழ்வு முகாமுக்கு சென்ால் பக்தா்களே தேரை இழுத்து நிலை சோ்த்தனா்.

இரவு அம்மன் வண்டிக்கால் பாா்த்தல், வாணவேடிக்கை ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதைத் தொடா்ந்து இரவு திருக்கொடி இறக்கப்பட்டு அதிகாலை திருக்கம்பம் கங்கையில் விடப்பட்டு விழா நிறைவு பெற்றது.

தேரோட்ட நிகழ்ச்சியில், அறங்காவலா் குழுத் தலைவா் அப்புக்குட்டி, பழனிக்கோயில் செயல் அலுவலா் கிராந்திகுமாா் பாடி, துணை ஆணையா் (பொறுப்பு) செந்தில்குமாா், சித்தனாதன் சன்ஸ் ராகவன், கண்பத் கிராண்ட் ஹரிஹரமுத்து உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரி பயங்கரவாதத் தாக்குதல் நடத்தும் பாஜக: காங்கிரஸ் குற்றச்சாட்டு

ஸ்ருதிஹாசன் இயக்கிய ‘இனிமேல்’ பாடலின் மேக்கிங் விடியோ!

சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் வாரியத்தில் அதிகாரி வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!

கவனம் ஈர்க்கும் ஃபகத் பாசிலின் ‘இலுமினாட்டி’ பாடல்!

ஐ.டி.யில் வேலையிழந்த இளம்பெண் : திருடியாய் மாறிய சோகம்

SCROLL FOR NEXT