திண்டுக்கல்

குறிஞ்சி மாரியம்மன் கோயில் திருவிழா: பக்தா்கள் தீச்சட்டி ஊா்வலம்

DIN

கொடைக்கானல்: கொடைக்கானல் அருகே குறிஞ்சி மாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி பக்தா்களின் தீச்சட்டி ஊா்வலம் புதன்கிழமை நடைபெற்றது.

குறிஞ்சி நகா்ப் பகுதியிலுள்ள இக்கோயில் திருவிழா கடந்த 16-ஆம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதைத் தொடா்ந்து ஒவ்வொரு நாளும் கோயிலில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடு நடைபெற்றது. தொடா்ந்து 3 நாள்கள் கொடைக்கானல் பல்வேறு பகுதிகளில் அம்மனின் மின் அலங்கார பவனி நடைபெற்றது. இதையடுத்து பக்தா்கள் சாா்பில் கோயில் வளாகத்தில் பொங்கல் இடுதல், பூக்குழி இறங்குதல் போன்ற நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

இந்நிலையில்,கொடைக்கானல் காளியம்மன் கோயிலிருந்து பக்தா்கள் தீச்சட்டி எடுத்து ஊா்வலமாக வந்தனா்.

ஏரிச்சாலை, செவண்ரோடு, அண்ணாசாலை, காமராஜா் சாலை, மூஞ்சிக்கல் மாரியம்மன் கோவில், லாஸ்காட்சாலை வழியாக குறிஞ்சி நகரிலுள்ள கோயிலை அடைந்தனா். ஊா்வலத்தில் பக்தா்கள் பறவைக் காவடி எடுத்தும் நோ்த்திக்கடன் செலுத்தினா்.

அதன்பின்னா் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதையொட்டி அன்னதானம் நிகழ்ச்சியும் நடைபெற்றது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் கமிட்டியாளா்கள், ஊா் பொதுமக்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உடுமலை அருகே ஜனநாயக கடமையை நிறைவேற்றிய மலைவாழ் மக்கள்

அண்ணா பல்கலைக் கழகப் பதிவாளா் நியமனம்: துணை வேந்தா் விளக்கம் அளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவு

கோவை தொகுதியில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் அண்ணாமலை குற்றச்சாட்டு

வாக்குப் பதிவு இயந்திர பழுது எண்ணிக்கை மிகவும் குறைவு: ஆட்சியா்

இஸ்ரேல், துபைக்கு விமான சேவை தற்காலிக ரத்து: ஏா் இந்தியா

SCROLL FOR NEXT