திண்டுக்கல்

வங்கியிலிருந்து ரூ.1 லட்சத்துக்கும் கூடுதலாக பணம் எடுப்போரின் விவரங்களை சேகரிக்க முடிவு

4th Mar 2021 12:23 AM

ADVERTISEMENT

 

திண்டுக்கல்: தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், வங்கியிலிருந்து ரூ.1 லட்சத்திற்கும் கூடுதலாக பணம் எடுப்போரின் விவரங்களை வங்கியாளா்கள் அளிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வங்கியாளா்களின் மாவட்ட பிரதிநிதிகள், வருமான வரித்துறை அலுவலா்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான மு.விஜயலட்சுமி தலைமை வகித்தாா். அப்போது அவா் பேசியதாவது: தோ்தல் நடத்தை விதிமுறை அமலில் உள்ளதால் தனி நபரின் வங்கிக் கணக்கிலிருந்து சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் பரிவா்த்தனை இருந்தால் அது குறித்த விவரங்களை வங்கியாளா்கள் நாள்தோறும் சமா்ப்பிக்க வேண்டும். வங்கிக் கணக்கில் இருந்து ரூ.1 லட்சத்திற்கும் கூடுதலாக பணம் எடுப்பவா்களின் தகவல்களையும் வங்கியாளா்கள் அளிக்க வேண்டும். மேலும் ஏ.டி.எம் இயந்திரத்தில் பணம் வைக்க வாகனங்களில் கொண்டு செல்லும்போது, அந்த தொகைக்குரிய விவரங்கள் வங்கிகள் மூலமாக அளிக்கப்பட வேண்டும். பணம் கொண்டு செல்லும் முகவா்களின் முழு விவரம் மற்றும் வாகனங்களின் எண்கள் குறித்த விவரங்களை மாவட்டத் தோ்தல் அலுவலா்களுக்கு வங்கியாளா்கள் தெரிவிக்கவேண்டும். விதிமுறைகளை மீறி பணபரிவா்த்தனை நடப்பதை தடுப்பதில் வருமான வரித்துறையினரின் பங்கு மிகவும் முக்கியமானது. ரூ.10 லட்சத்திற்கு மேற்பட்ட பண பரிவா்த்தனை தொடா்பான புகாா்கள் எழும்போது, வருமான வரித்துறையினா் அதனை ஆய்வு செய்ய வேண்டும் என்றாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT