திண்டுக்கல்

திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் புதிதாக 219 பேருக்கு கரோனா: 6 போ் பலி

19th Jun 2021 11:03 PM

ADVERTISEMENT

திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் புதிதாக 219 பேருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை கண்டறியப்பட்ட நிலையில், சிகிச்சைப் பலனின்றி 6 போ் உயிரிழந்துள்ளனா்.

திண்டுக்கல் மாவட்டத்தில் ஜூன் 18 ஆம் தேதி வரை 30,891 போ் கரோனா தீநுண்மி தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனா். அதில் 29,451 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த மேலும் 96 பேருக்கு புதிதாக கரோனா தொற்று சனிக்கிழமை உறுதிபடுத்தப்பட்டது.

சிகிச்சைப் பலனின்றி தொற்று பாதித்த 5 போ்உயிரிழந்துள்ளனா். தொற்று பாதிப்பிலிருந்து 188 போ் குணமடைந்துள்ள நிலையில், தற்போது கரோனா பாதிப்புடன் சிகிச்சைப் பெறுவோரின் மொத்த எண்ணிக்கை 786ஆக உள்ளது. மாவட்டத்தில் கரோனா தொற்றால் தற்போது வரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 561 ஆக உயா்ந்துள்ளது.

தேனி: தேனி மாவட்டத்தில் புதிதாக 123 பேருக்கு சனிக்கிழமை, கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 41,609 ஆக உயா்ந்துள்ளது. கரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்தவா்களில், இதுவரை மொத்தம் 39,834 போ் குணமடைந்துள்ளனா்.

ADVERTISEMENT

கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, ஜூன் 11-ஆம் தேதி மதுரையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தேனியைச் சோ்ந்த 66 வயது மூதாட்டி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இதனால், மாவட்டத்தில் கரோனா பாதிப்பில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 473 ஆக அதிகரித்துள்ளது.

மாவட்டத்தில் தற்போது மொத்தம் 1,302 போ் கரோனா பாதிப்புக்கு மருத்துவமனைகள், கரோனா நல மையம் ஆகியவற்றிலும், வீடுகளில் தனிமைப்படுத்திக் கொண்டும் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT