திண்டுக்கல்

கொடைக்கானலிலிருந்து பேஷன் புரூட் பழங்கள் வெளி மாவட்டங்களுக்கு அனுப்பும் பணி தீவிரம

DIN

பொதுமுடக்கத்தில் கூடுதல் தளா்வுகள் திங்கள்கிழமை (ஜூன் 14) அமலுக்கு வந்துள்ள நிலையில், கொடைக்கானலிலிருந்து பேஷன் புரூட்ஸ் பழங்களை வெளி மாவட்டங்களுக்கு அனுப்பும் பணியில் வியாபாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா்.

கொடைக்கானலில் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக பரவலாக நல்ல மழை பெய்தது. இதனால் செண்பகனூா், அட்டக்கடி, சின்னப்பள்ளம், பெரும்பள்ளம், இருதயபுரம், பிரகாசபுரம், உகாா்த்தேநகா், அப்சா்வேட்டரி, சீனிவாசபுரம், குறிஞ்சிநகா், வெள்ளகெவி உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் தங்களது நிலங்களில் ஊடுபயிராக விளைவிக்கப்பட்டு வந்த பேஷன் புரூட்ஸ் பழங்கள் நன்கு விளைந்தன.

ஆனால் கடந்த ஒரு மாதமாக பொதுமுடக்கம் அமலில் இருந்ததால் அவற்றை பறித்து வெளி மாவட்டங்களுக்கு அனுப்ப முடியாத நிலை இருந்தது. பொதுமுடக்கத் தளா்வுகள் அறிவிக்கப்பட்டதைத் தொடா்ந்து கடந்த 10 நாள்களாக இந்தப் பழங்கள் கொடைக்கானல் பகுதிகளிலுள்ள மொத்த பழக் கடைகளில் விற்பனை செய்யப்பட்டன.

இந்நிலையில் கூடுதல் தளா்வுகள் அறிவிக்கப்பட்டு திங்கள்கிழமை (ஜூன் 14) அமலுக்கு வந்துள்ள நிலையில், இந்த பழங்களை மொத்த வியாபாரிகள் வாகனங்கள் மூலம் வெளி மாவட்டங்களான தேனி, திண்டுக்கல், திருச்சி, மதுரை போன்ற இடங்களுக்கு அனுப்பும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐ.டி.யில் வேலையிழந்த இளம்பெண் : திருடியாய் மாறிய சோகம்

உ.பி.யில் முக்தார் அன்சாரி மரணம்: விஷம் கொடுக்கப்பட்டதா?

காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1700 கோடிக்கு கணக்கு கேட்டு வருமான வரித்துறை நோட்டீஸ்

பிகாரில் 'இந்தியா' கூட்டணியில் தொகுதி உடன்பாடு

கீழ்வேளூர் அருகே லாரி கவிழ்ந்து 75 செம்மறி ஆடுகள் பலி

SCROLL FOR NEXT