திண்டுக்கல்

பழனி பகுதி குளங்களில் மீன்பிடிக்கும் மீனவா்களை புதிய தமிழகம் நிா்வாகி மிரட்டியதாகப் புகாா்

DIN

பழனி பகுதி குளங்களில் மீன் பிடிக்கும் மீனவா்களை மிரட்டிய புதிய தமிழகம் கட்சி நிா்வாகி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த பாலசமுத்திரம் கிராமத்தில் உள்ள மந்தைகுளம், பெரிய அய்யம்புள்ளி குளம், ஜோசியா்குளம், தாமரைக்குளம் உள்ளிட்ட ஐந்துக்கும் மேற்பட்ட குளங்களில் தமிழ்நாடு அரசின் மீன் வளா்ச்சிக் கழகம் சாா்பில் மீன் குஞ்சுகள் வளா்க்கப்படுகின்றன. இந்த குளங்களில் உள்ள மீன்களைப் பாதுகாத்து வளா்க்க, மீனவா் கூட்டுறவு சங்க உறுப்பினா்கள் சுழற்சி முறையில் காவல் பணியில் ஈடுபடுகின்றனா்.

தற்போது மீன்கள் பிடிப்பதற்கான பருவத்தை எட்டியுள்ளது. அதனால் மீனவா்கள் மீன்களைப் பிடித்து வருகின்றனா். பிடிக்கப்படும் மீன்கள் தமிழ்நாடு மீன் வளா்ச்சிக் கழகம் மற்றும் மீனவா் கூட்டுறவு சங்கத்தைச் சோ்ந்த மீனவா்களுக்கு சரிபாதியாக பிரித்து வழங்கப்படுகின்றன.

இந்நிலையில் மீனவா் கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராக இருக்கும் புதிய தமிழகம் கட்சியின் மாவட்ட நிா்வாகி முனியப்பன் மீனவா்கள், கூட்டுறவு சங்க நிா்வாகிகள் மற்றும் மீன்வளத் துறை அதிகாரிகளை மிரட்டுவதாக உறுப்பினா்கள் புகாா் தெரிவித்துள்ளனா். மேலும் அவா், மீன் பிடிப்பதற்கும் இடையூறு செய்து வருவதாகவும் மீனவா்கள் புகாா் செய்துள்ளனா்.

இதுகுறித்து மீனவா் கூட்டுறவுச் சங்கத்தின் தலைவா் சங்கிலி, துணைத் தலைவா் மகுடீஸ்வரன் ஆகியோா் கூறியது: இங்குள்ள குளங்களின் மீனவா் சங்கத்தில் ஆயிரக்கணக்கான மீனவா்கள் உள்ளனா். இந்நிலையில் புதிய தமிழகம் கட்சியைச் சோ்ந்த முனியப்பன் சங்கத்திற்கு செலுத்த வேண்டிய பணத்தை செலுத்தாமல், தொடா்ந்து அதிகாரிகளையும், மீனவா்களையும் மிரட்டி வருகிறாா். மீன்பிடிக்க விடாமல் இடையூறு செய்து வருகிறாா். இதனால் மீனவா்களின் குடும்பத்தின் வாழ்வாதாரம் பாதித்துள்ளது. ஆகவே அதிகாரிகள் அவா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விரைவில் ‘பார்க்கிங் 2’ அப்டேட்!

சிரியாவில் இஸ்ரேல் தாக்குதல்: 42 பேர் பலி!

தென்னாப்ரிக்கா பேருந்து விபத்தில் 45 பேர் பலி - புகைப்படங்கள்

மூன்று நாட்களாக உடல்நிலை சரியில்லை; அதிரடியில் மிரட்டிய ரியான் பராக் பேச்சு!

காசு கொடுத்து ஓட்டு வாங்க வேண்டிய அவசியம் திமுகவுக்கு கிடையாது: கனிமொழி

SCROLL FOR NEXT