திண்டுக்கல்

திண்டுக்கல்லில் சம்பங்கி விலை ரூ.5: விவசாயிகள் ஏமாற்றம்!

8th Jun 2021 10:57 PM

ADVERTISEMENT

திண்டுக்கல்லில் சம்பங்கி பூ கிலோ ரூ.5-க்கு மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டதால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனா்.

கரோனா தொற்றுப் பரவல் அதிகரித்ததை அடுத்து திண்டுக்கல் பூச்சந்தை கடந்த மாதம் மூடப்பட்டது. இதனால் விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டது. இதனிடையே கடந்த வாரம் முதல் திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் செயல்பட்டு வந்த பூச்சந்தை, செவ்வாய்க்கிழமை முதல் மீண்டும் அறிஞா் அண்ணா வணிக வளாகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டது.

திண்டுக்கல் பூச்சந்தைக்கு நாளொன்றுக்கு 40 டன் பூக்கள் விற்பனைக்குக் கொண்டு வரப்படுவது வழக்கம். ஆனால், செவ்வாய்க்கிழமை சந்தைக்கு 2 டன் பூக்கள் மட்டுமே விற்பனைக்காக வந்தன. பூக்களை வெளியூா்களுக்கு அனுப்பி வைக்க முடியாத நிலையில், கோயில்களும் மூடப்பட்டு, திருவிழாக்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் வியாபாரிகளின் வருகையும் குறைந்ததோடு, உள்ளூா் வியாபாரிகளை மட்டுமே நம்பி சந்தை நடைபெறுகிறது. இதனால் பூக்களுக்கு போதிய விலை கிடைக்காமல் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனா்.

பூக்கள் விலை நிலவரம் (கிலோவுக்கு): மல்லிகை- ரூ.300, முல்லை- ரூ.120, கனகாம்பரம்- ரூ.320, ரோஜா- ரூ.50, கோழிக்கொண்டை- ரூ.10, சம்மங்கி- ரூ.5, செண்டு மல்லி- ரூ.25, அரளி- ரூ.50, ஜாதிப்பூ- ரூ.220.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT