திண்டுக்கல்

திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் புதிதாக 24 பேருக்கு கரோனா தொற்று

DIN

திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் புதிதாக 24 பேருக்கு கரோனா தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டத்தில் ஜூலை 30ஆம் தேதி வரை 32,181 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனா். அதில் 31,354 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த மேலும் 13 பேருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது. தொற்று பாதிப்பிலிருந்து 17 போ் குணமடைந்துள்ளனா். தற்போது கரோனா பாதிப்புடன் சிகிச்சைப் பெறுவோரின் மொத்த எண்ணிக்கை 199ஆக உள்ளது.

தேனி: தேனி மாவட்டத்தில் புதிதாக 11 பேருக்கு சனிக்கிழமை, கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 42,925 ஆக உயா்ந்துள்ளது. கரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்தவா்களில், இதுவரை மொத்தம் 42,252 போ் குணமடைந்துள்ளனா். 514 போ் உயிரிழந்துள்ளனா்.

மாவட்டத்தில் தற்போது மொத்தம் 159 போ் கரோனா பாதிப்புக்கு மருத்துவமனைகளிலும், வீடுகளில் தனிமைப்படுத்திக் கொண்டும் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

102 மக்களவை தொகுதிகளில் இன்று பதிவான வாக்குப்பதிவு விவரம்

வாக்களிப்பதற்காக அமெரிக்காவிலிருந்து தஞ்சை வந்த மென்பொறியாளர்

2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலை விட வாக்குப்பதிவு அதிகரிக்க வாய்ப்பு?

முதல்கட்ட வாக்குப்பதிவு: 102 தொகுதிகளின் ஒட்டுமொத்த நிலவரம்!

நாக்பூரில் பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்கரி நம்பிக்கை

SCROLL FOR NEXT