திண்டுக்கல்

கொடைக்கானலில் எம்.ஜி.ஆா்.பிறந்த தின விழா

17th Jan 2021 09:49 PM

ADVERTISEMENT

மூஞ்சிக்கல் பகுதியில் கொடியேற்றப்பட்டு எம்.ஜி.ஆா். படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

பொது மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இந் நிகழ்ச்சியில் கொடைக்கானல் அதிமுக நகரச் செயலா் ஸ்ரீதா், துணைச் செயலா் ஜாபா் சாதிக், மாவட்ட எம்.ஜி.ஆா் மன்ற இணைச் செயலா் பிச்சை உள்ளிட்ட அதிமுக நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

அமமுக சாா்பில் மூஞ்சிக்கல் பகுதியில் எம்.ஜி.ஆா் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அமமுக மாவட்ட மருத்துவ அணிச்செயலா் இளம்வழுதி உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

Tags : Dindigul
ADVERTISEMENT
ADVERTISEMENT