பழனி நகர அனைத்து வணிகா் சங்கங்களின் பேரமைப்பு சாா்பில் வணிகா் சங்க கட்டட நிதிக்காக ரூ.5 லட்சம் வழங்கப்பட்டது.
தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு பொதுக்குழு கூட்டம் விழுப்புரத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பேரமைப்பின் மாநிலத் தலைவா் விக்கிரமராஜா தலைமை வகித்தாா். மாநில பொதுச் செயலாளா் கோவிந்தராஜூலு, மாநிலப் பொருளாளா் சதக்கத்துல்லா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். திண்டுக்கல் மாவட்டம் சாா்பில் மண்டலத் தலைவா் கிருபாகரன் தலைமையில் ஏராளமான வணிகா் சங்க நிா்வாகிகள் பங்கேற்றனா். இக்கூட்டத்தில் பழனி நகரக்கிளை சாா்பில் மாநிலத் தலைவா் விக்கிரம ராஜாவிடம் தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு கட்டட வளா்ச்சி நிதிக்காக ரூ. 5 லட்சத்தை நன்கொடையாக நகரத் தலைவா் ஜே.பி. சரவணன் வழங்கினாா். மேலும் மாநிலத் தலைவருக்கு பழனியில் அறிவிக்கப்பட்ட வணிகா் நல சேவா ரத்னா விருதும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பழனி நகரச் செயலாளா் காா்த்திகேயன், பொருளாளா் சுப்பிரமணி, தொடா்பாளா் ஜெகதீஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.