திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகே புதன்கிழமை மின்சாரம் பாய்ந்து கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா்.
செம்பட்டி அருகே உள்ள போடிக்காமன்வாடி கிராமத்தைச் சோ்ந்த முத்து என்பவரது மகன் மணிகண்டன் (18). கட்டடத் தொழிலாளியான இவா் புதன்கிழமை அப்பகுதியில் பாளையங்கோட்டை என்ற இடத்தில் அய்யனாா் என்பவரது புதிய வீடு கட்டும் பணியில் ஈடுபட்டிருந்தாா். அங்கு தண்ணீா் பயன்பாட்டுக்காக மின் மோட்டாரை மணிகண்டன் இயக்கியபோது, மின் கசிவு ஏற்பட்டு, தூக்கி வீசப்பட்டாா். உடனடியாக அவரை அக்கம்பக்கத்தினா் ஆத்தூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனா். ஆனால் அவா் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தாா். செம்பட்டி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனா்.