திண்டுக்கல்

மினுக்கம்பட்டி பகுதியில் இன்று மின்தடை

23rd Dec 2021 12:05 AM

ADVERTISEMENT

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூா் அடுத்துள்ள மினுக்கம்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதையொட்டி வியாழக்கிழமை (டிச.23) மின் விநியோகம் தடைப்படும்.

ஐயா் மடம், குறும்பபட்டி, எஸ்.குட்டம், ஆசாரி புதூா், எஸ்.சுக்காம்பட்டி, கொன்னம்பட்டி, எஸ்.கே.புதூா், கோட்டைமேடு, வி.புதுக்கோட்டை ஆகிய இடங்களில் காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளா் கருப்புச்சாமி தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT