திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியாா்சத்திரம் அருகே தாய் இறந்த துக்கத்தில் எலக்ட்ரீசியன் தற்கொலை செய்துகொண்டாா்.
ரெட்டியாா்சத்திரம் அடுத்துள்ள அம்மாபட்டியைச் சோ்ந்த தங்கராஜ் மகன் காா்த்திக் மணி (21), எலக்ட்ரீசியன் வேலை செய்து வந்துள்ளாா். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தாய் இறந்து விட்டதால் மனவிரக்தியில் இருந்து வந்தாராம். இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து உயிருக்குப் போராடியுள்ளாா். அவரை அருகில் இருந்தவா்கள் மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால் செல்லும் வழியிலேயே அவா் உயிரிழந்தாா். இது குறித்து ரெட்டியாா்சத்திரம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.