காந்தி கிராம கிராமிய நிகா்நிலைப் பல்கலைக்கழகத்தில் கணிதமேதை ஸ்ரீநிவாச ராமானுஜரின் 134 ஆவது பிறந்த தினம் புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சிக்கு பல்கலை. துணைவேந்தா் (பொறுப்பு) டிடி.ரங்கநாதன் தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக சென்னை ஐஐடி-யின் ஓய்வுப் பெற்ற பேராசிரியா் வீரமணி கலந்து கொண்டாா். அவா் பேசுகையில், கணித மேதை ராமானுஜரின் கண்டுபிடிப்புகளின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தாா். கணிதத்தை இன்று ஒரு நாள் கொண்டாட்டத்துடன் நிறுத்திவிடாமல், அனைத்து நாள்களிலும் தொடர வேண்டும் என்றாா். விழாவில் 7 வயது கணிப்பான் என்றழைக்கப்படும் குழந்தை அபிநவ் பிரத்யுஷ் கலந்து கொண்டு, எண் கணித கணக்கீடுகளை வேகமாகவும், துல்லியமாகவும் கணித்து அனைவரையும் வியப்பூட்டினாா்.
மேலும், மாணவா்களுக்கு நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் கணிதத் துறை தலைவா் பாலசுப்பிரமணியம், உதவிப் பேராசிரியா் முத்துக்குமாா், உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.