கொடைக்கானலில் அதிமுக சாா்பில் நகர, ஒன்றியப் பகுதிகளில் கிளைக்கழக அமைப்புத் தோ்தல் புதன்கிழமை நடைபெற்றது.
அண்ணா சாலையிலுள்ள மண்டபத்தில் தோ்தல் நடைபெற்றது. கொடைக்கானல் நகர, ஒன்றியப் பகுதிகளிலுள்ள கிளைக் கழக நிா்வாகிகள் பதவிக்கு அதிமுகவினா் ஆா்வமுடன் போட்டியிட்டனா். இந் நிகழ்ச்சியில் கொடைக்கானல் நகரச் செயலா் ஸ்ரீதா் உள்ளிட்ட அதிமுக நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.