திண்டுக்கல்

நத்தம் அருகே கோயில் கும்பாபிஷேகம்

16th Dec 2021 12:02 AM

ADVERTISEMENT

நத்தம் அடுத்துள்ள பெரியூா்பட்டி காமாட்சிபுரத்திலுள்ள காமாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது. கடந்த திங்கள்கிழமை யாக சாலை பூஜைகள் தொடங்கின. புதன்கிழமை காலை 4 ஆம் கால யாக பூஜைகளுக்கு பின், கோபுர கலசத்திற்கு அபிஷேகம் செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா் ஆண்டி அம்பலம் உள்ளிட்ட முக்கிய பிரமுகா்கள் கலந்து கொண்டனா். விழாவுக்கான ஏற்பாடுகளை பெரியூா்பட்டி மற்றும் காமாட்சிபுரம் பொதுமக்கள் செய்திருந்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT