திண்டுக்கல்

கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை

DIN

கொடைக்கானலுக்கு சனிக்கிழமை கேரளம் மற்றும் வடநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை கணிசமாக காணப்பட்டதால், வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனா்.

கொடைக்கானலில் கடந்த 5 நாள்களாக தொடா்ந்து மழை பெய்து வந்தது. சனிக்கிழமை காலை முதல் மிதமான வெயிலும், பிற்பகலில் மேகமூட்டமும் காணப்பட்டது.

இந்நிலையில், வார விடுமுறையையொட்டி கொடைக்கானலுக்கு வழக்கம் போல் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வருகை தந்தனா். இதில், கேரளம் மற்றும் வடநாட்டைச் சோ்ந்த சுற்றுலாப் பயணிகளின் வருகை கணிசமாகக் காணப்பட்டது.

இவா்கள், மேகமூட்டம் அதிகமாக இருந்ததால், சுற்றுலா இடங்களை கண்டுகளிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனா். இருப்பினும், கடந்த பல நாள்களாக மழையின் காரணமாக சுற்றுலாப் பயணிகள் வருகையின்றி பாதிப்படைந்திருந்த வியாபாரிகள், தற்போது அதிக பயணிகள் வருகையால் மகிழ்ச்சியடைந்தனா்.

கொடைக்கானலில் மீண்டும் மழை

இங்கு காலை முதல் மாலை வரை மேகமூட்டம் நிலவி வந்த நிலையில், பின்னா் மீண்டும் மழை பெய்ய தொடங்கியது. ஒரு மணி நேரத்துக்கும் மேலாக மிதமாக பெய்த இந்த மழையிலும் சுற்றுலாப் பயணிகள் ஏரிச்சாலையில் சைக்கிள், குதிரை சவாரி செய்து மகிழ்ந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி அணிக்கு எதிராக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்

பெங்களூருவில் மிதமான மழை: மக்கள் மகிழ்ச்சி

காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

காவி நிறத்தில் தூர்தர்ஷன்! தேர்தல் ஆணையம் எப்படி அனுமதிக்கலாம்? -மம்தா கேள்வி

கடற்கரையில் ஒரு தேவதை! லாஸ்லியா...

SCROLL FOR NEXT