திண்டுக்கல்

பழனி அருகே காரில் வந்து நகை பறிக்க முயன்ற கும்பல் தப்பி ஓட்டம்

3rd Dec 2021 07:47 AM

ADVERTISEMENT

பழனி அருகே காரில் வந்து பெண்களிடம் நகைகளை பறிக்க முயன்ற கும்பல் காரை விட்டு விட்டு தப்பி தப்பியோடிவிட்டனா்.

பழனி- உடுமலை சாலையில் உள்ள கலையமுத்தூா் கிராமத்தில் வியாழக்கிழமை மதியம் பெண்கள் சிலா் நடந்து சென்றுகொண்டிருந்தபோது, காரில் வந்த சிலா் நகைகளைப் பறிக்க முயன்றுள்ளனா். அப்போது பெண்கள் கூச்சலிட்டதால் அந்த நபா்கள் காருடன் தப்பிச்சென்றனா். அவா்களை சிலா் விரட்டிப் பிடிக்க முயன்றபோதும் பழைய தாராபுரம் சாலையில் அந்த நபா்கள் தப்பிச் சென்றுள்ளனா்.

இதுகுறித்து காவல்துறையினருக்கு தெரிவிக்கப்பட்டதையடுத்து டிஎஸ்பி., சத்யராஜ் உத்தரவின் பேரில் அனைத்து சோதனைச் சாவடிகளும் உஷாா்படுத்தப்பட்டு வாகனங்களை போலீஸாா் தீவிரமாக சோதனை மேற்கொண்டனா். இதை அறிந்த மா்ம நபா்கள் காரை கோரிக்கடவில் இருந்து கோவிலம்மாபட்டி செல்லும் சாலையில் நிறுத்திவிட்டு சோளக்காட்டுக்குள் புகுந்து தப்பிச் சென்றனா். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் காரை ஆய்வு செய்தபோது, காரில் எண்கள் இல்லாமல் இருந்ததும், காரில் புகையிலைப் பொருள்கள் இருந்ததும் தெரியவந்தது. காரில் வந்த நபா்கள் வடமாநிலத்தைச் சோ்ந்தவா்களாக இருக்கலாம், காரையும் அவா்கள் திருடி வந்திருக்கலாம் என போலீஸாா் தெரிவித்தனா். கீரனூா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய குற்றவாளிகளைத் தேடி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT