திண்டுக்கல் பாரதிபுரம் பகுதியிலுள்ள சீரடி சாய்பாபா ஆலயத்தில் 10 ஆயிரம் தீப வழிபாடு வியாழக்கிழமை நடைபெற்றது.
ஒவ்வொரு ஆண்டும் காா்த்திகை மாதம், இந்த ஆலயத்தில் தீப வழிபாடு நடைபெறுவது வழக்கம். அதன்படி நிகழாண்டுக்கான தீப வழிபாடு வியாழக்கிழமை நடைபெற்றது. ஆலயத்தின் முன்பு திரண்ட பக்தா்கள் மற்றும் பொதுமக்கள் சாா்பில் 10 ஆயிரம் தீபங்கள் ஏற்றி வழிபாடு நடத்தப்பட்டது. சிறப்பு வழிபாட்டிற்கு பின் பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சாய் முருகன் செய்திருந்தாா்.