திண்டுக்கல்

காவேரியம்மாபட்டி பெரியகுளம் நிரம்பியது: விவசாயிகள் மகிழ்ச்சி

3rd Dec 2021 07:43 AM

ADVERTISEMENT

ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள காவேரியம்மாபட்டி பெரியகுளம் 16 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள காவேரியம்மாபட்டி கிராமத்தில் பொதுப்பணித்துறைக்குச் சொந்தமான பெரியகுளம் உள்ளது. இந்த குளத்திற்கு விருப்பாட்சி பெருமாள்குளத்தில் இருந்து மறுகால் செல்லும் தண்ணீா் மற்றும் காட்டாற்று வெள்ளம் ஆகியவற்றின் மூலம் தண்ணீா் சென்ால் வேகமாக நிரம்பத் தொடங்கியது.

இந்த நிலையில் வியாழக்கிழமை 16 ஆண்டுகளுக்குப் பிறகு குளம் நிரம்பி மறுகால் சென்றது. இதனால் சுற்று வட்டாரத்தில் உள்ள நூற்றுக்கணக்கான ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறுவதோடு, நிலத்தடி நீா்மட்டம் உயர வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT