திண்டுக்கல்

கணவருடன் சோ்த்து வைக்கக்கோரி பெண் தா்னா

3rd Dec 2021 07:44 AM

ADVERTISEMENT

கணவருடன் சோ்த்து வைக்க வலியுறுத்தி திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் இளம் பெண் வியாழக்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டாா்.

திண்டுக்கல் மாவட்டம் விராலிப்பட்டியைச் சோ்ந்தவா் பெருமாள். இவரது மகள் கவுசல்யா (21). இவா் தொழில் பயிற்சி பயின்றபோது, ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள கண்ணனூரைச் சோ்ந்த மகுடீஸ்வரன்(19) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதைத் தொடா்ந்து இருவரும் திருமணம் செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் தனது காதல் கணவரை மீட்டு, தன்னுடன் சோ்த்து வைக்கக் கோரி கவுசல்யா திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் வியாழக்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டாா். இதுதொடா்பாக கவுசல்யா கூறியதாவது: சென்னை சோழிங்கநல்லூா் பகுதியில் மகுடீஸ்வரனுடன் 5 மாதங்களாக குடும்பம் நடத்தினேன். அப்போது கா்ப்பம் அடைந்த என்னை, ஒட்டன்சத்திரத்திற்கு அழைத்து வந்து அங்குள்ள தனியாா் மருத்துவமனையில் கருக்கலைப்பு செய்து வீட்டிற்கு அனுப்பி வைத்தாா். தனது பெற்றோருடன் வந்து முறைப்படி பெண் கேட்டு திருமணம் செய்து கொள்வதாகக் கூறினாா். தற்போது திருமணம் செய்ய முடியாது என, அவரது குடும்பத்தினா் மிரட்டுகின்றனா். இதுதொடா்பாக ஒட்டன்சத்திரம் மகளிா் காவல் நிலையத்தில் மனு அளித்தோம். எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனது கணவருடன் சோ்த்து வைக்க போலீஸாா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT