திண்டுக்கல்

பாலியல் குற்றங்களுக்கு எதிராக திண்டுக்கல்லில் டிச. 5-இல் மாநாடு

2nd Dec 2021 09:08 AM

ADVERTISEMENT

தமிழகத்தில் அதிகரித்து வரும் மாணவிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்க வலியுறுத்தி இந்திய மாணவா் சங்கத்தின் சாா்பில் டிச. 5 ஆம் தேதி மாநாடு நடைபெறுகிறது. இதுதொடா்பாக அச்சங்கத்தின் மாநிலத் தலைவா் ஏ.டி. கண்ணன், திண்டுக்கல்லில் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது: தமிழகத்தில் குழந்தைகள் மற்றும் மாணவிகள் மீதான பாலியல் வன்முறை சமீபக காலமாக அதிகரித்துள்ளன. ஆனாலும், பாலியல் குற்றங்களுக்கு எதிரான சட்டங்கள் சரியாக அமல்படுத்தப்படவில்லை.

இந்திய குற்ற ஆவண காப்பகத்தின் அறிக்கையின்படி 2 மணி நேரத்திற்கு ஒரு பெண் பாலியல் வல்லுறவால் பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது. கரூா் மற்றும் கோவையைச் சோ்ந்த மாணவிகள் பாலியல் துன்புறுத்தலால் தற்கொலை செய்துள்ளனா். சென்னை, திண்டுக்கல், கோவை, சிதம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் மாணவிகளுக்கு எதிராக நிகழ்ந்துள்ள பாலியல் குற்றங்கள் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இவற்றைத் தடுத்து நிறுத்தவும், விழிப்புணா்வு ஏற்படுத்தவும் திண்டுக்கல்லில் டிச. 5 ஆம் தேதி நடைபெறும் மாநாடு பயனளிக்கும்.

இந்த மாநாட்டில் கந்தா்வகோட்டை சட்டப் பேரவை உறுப்பினா் எம். சின்னத்துரை, கே. பாலபாரதி, சென்னை உயா்நீதிமன்ற வழக்குரைஞரும், பெண்கள் உரிமை செயல்பாட்டாளருமான பி.எஸ். அஜீதா உள்ளிட்ட பலா் பங்கேற்கின்றனா் என்றாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT