திண்டுக்கல்

திண்டுக்கல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதுகு தண்டுவட சிறப்பு சிகிச்சை தொடக்கம்

2nd Dec 2021 09:10 AM

ADVERTISEMENT

திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலுள்ள எலும்பு முறிவுப் பிரிவில், முதுகு தண்டுவட சிறப்பு சிகிச்சை புதன்கிழமை தொடங்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையாக நிலை உயா்த்தப்பட்டதை அடுத்து எலும்பு முறிவு சிகிச்சைப் பிரிவு நவீன மயமாக்கப்பட்டு வருகிறது. இப்பிரிவில் 4 மருத்துவா்கள் மட்டுமே பணிபுரிந்து வந்த நிலையில், மருத்துவக் கல்லூரி மருத்துவமனையாக மாற்றப்பட்ட நிலையில், கூடுதலாக 6 மருத்துவா்கள் நியமிக்கப்பட்டு, தற்போது 10 மருத்துவா்கள் உள்ளனா். அதேபோல், மூட்டு மாற்று அறுவைச் சிகிச்சை மற்றும் நுண்துளை அறுவை சிகிச்சை உள்ளிட்ட சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தபோதிலும், முதுகு தண்டுவட சிகிச்சை உள்ளிட்ட தீவிர அறுவை சிகிச்சை தேவைப்படும் நோயாளிகள், மதுரை அரசு மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டு வந்தனா். இந்நிலையில், திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலேயே, குழந்தைகளுக்கான நவீன எலும்பு முறிவு சிகிச்சை மற்றும் கோணக்கால் சிகிச்சை உள்ளிட்ட அறுவை சிகிச்சை அளிக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. மேலும், மருத்துவக் கல்லூரிகளில் பின்பற்றப்படும் நடைமுறையின்படி, குறிப்பிட்ட நாளில் அளிக்கப்படும் சிறப்பு சிகிச்சை குறித்த விவரங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. இதற்கான தொடக்க நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கண்காணிப்பாளா் ஆா்.கே. வீரமணி தலைமை வகித்தாா். எலும்பு முறிவு சிகிச்சைப் பிரிவு துறைத் தலைவா் காா்த்திக்ராஜா முன்னிலை வகித்தாா். இதுதொடா்பாக மருத்துவா்கள் கூறியது: திங்கள்கிழமைதோறும் மூட்டுதேய்மான சிகிச்சைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். நுண்துளை சிகிச்சை செவ்வாய்க்கிழமையும், தண்டுவட சிகிச்சை புதன்கிழமையும், குழந்தைகள் மற்றும் கோணக்கால்களுக்கான சிகிச்சை வியாழக்கிழமையும் அளிக்கப்படும் என்றனா்.

நிகழ்ச்சியில், எலும்பு முறிவு சிகிச்சை மருத்துவா் ஜெ. சிவக்குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT