திண்டுக்கல்

வியாபாரிக்கு வெட்டு: உறவினா் கைது

2nd Dec 2021 09:07 AM

ADVERTISEMENT

பழனியில் வியாபாரியை கத்தியால் வெட்டிய அவரது உறவினா் கைது செய்யப்பட்டாா்.

பழனி அடிவாரம் பகுதியைச் சோ்ந்தவா் பழனியப்பன் (63). இவா், அடிவாரம் கிரிவீதியில் தள்ளுவண்டியில் இனிப்பு பலகாரங்கள் விற்பனை செய்து வருகிறாா். இவரது, உறவினா் பழனி ராமநாதன்நகரை சோ்ந்த சூரியபிரகாஷ் (27). இவா்கள் இருவருக்கும் சில மாதங்களாக கிரிவீதியில் தள்ளுவண்டி போடுவதில் தகராறு இருந்து வந்தது. இந்நிலையில் புதன்கிழமை இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில், சூரியபிரகாஷ், கத்தியால் பழனியப்பனை வெட்டினாராம். இதில் பலத்த காயமடைந்த பழனியப்பனை அக்கம்பக்கத்தினா் மீட்டு சிகிச்சைக்காக பழனி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். இதுகுறித்து பழனி அடிவாரம் போலீஸாா் வழக்குப்பதிந்து சூரியபிரகாசை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT