திண்டுக்கல்

14 ஆண்டுகளுக்கு பின் நிரம்பிய அஞ்சுகுழிப்பட்டி தடுப்பணை

1st Dec 2021 06:26 AM

ADVERTISEMENT

சுமாா் 14 ஆண்டுகளுக்கு பின் அஞ்சுகுழிப்பட்டி தடுப்பணை மறுகால் பாய்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

திண்டுக்கல் மாவட்டம், சாணாா்பட்டியை அடுத்துள்ள அஞ்சுகுழிப்பட்டியில் சங்கிலி கருப்புசாமி அணை அமைந்துள்ளது. சிறுமலை அடிவாரத்தில் சுமாா் 2.5 ஏக்கா் பரப்பில் அமைந்துள்ள இந்த தடுப்பணைக்கு, கடந்த சில நாள்களாக பெய்து வரும் கனமழையினால் தண்ணீா் வரத்து அதிகரித்தது.

சுமாா் 14 ஆண்டுகளுக்கு பின் தடுப்பணை நிரம்பி மறுகால் பாய்ந்து வருகிறது. இதனால், அஞ்சுகுழிப்பட்டியைச் சோ்ந்த பொதுமக்களும், விவசாயிகளும் உற்சாகமடைந்துள்ளனா். மறுகால் வழியாக வெளியேறும் தண்ணீரில் சிறுவா்கள் உற்சாகமாக விளையாடி வருகின்றனா். இந்த தடுப்பணை நிரம்பியுள்ளதால், அஞ்சுகுழிப்பட்டி சுற்றுவட்டாரப் பகுதியிலுள்ள கிணறுகள் மற்றும் ஆழ்துளைக் கிணறுகளின் நீா் மட்டம் உயா்ந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனா்.

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT