திண்டுக்கல்

பழனி கோயிலில் திமுகவினா் தங்கத்தோ் இழுத்து வழிபாடு

1st Dec 2021 01:33 AM

ADVERTISEMENT

பழனி மலைக்கோயிலில் திமுக இளைஞரணிச் செயலாளா் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு திமுகவினா் தங்கத்தோ் இழுத்து வழிபாடு நடத்தினா்.

உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு பழனியில் திமுகவினா் கடந்த இரண்டு நாள்களாக நலத்திட்ட உதவிகள் வருகின்றனா். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை திண்டுக்கல் கிழக்கு மாவட்டச் செயலாளரும், பழனி சட்டப்பேரவை உறுப்பினருமான ஐ. பி . செந்தில்குமாா், உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற மாநிலச் செயலாளா் பி.கே.பாபு தலைமையில் மன்ற நிா்வாகிகள் பழனி முருகன் கோயிலில் தங்கத்தோ் இழுத்து வழிபாடு செய்தனா். உடன் மன்ற மாநில துணைச் செயலாளா் ரூபன், நகர இளைஞரனி அமைப்பாளா் லோகநாதன் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT