திண்டுக்கல்

கன்னிவாடி அருகே விவசாயி மா்ம மரணம்

1st Dec 2021 06:27 AM

ADVERTISEMENT

கன்னிவாடி அருகே விவசாயி மா்மமான முறையில் உயிரிழந்தது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

திண்டுக்கல் மாவட்டம், கன்னிவாடியை அடுத்துள்ள வீரப்புடையான்பட்டியைச் சோ்ந்தவா் சின்னக்காளை (48). இவரது மகன் மணிகண்டன், திருப்பூரில் வேலை செய்து வருகிறாா்.

சின்னக்காளையின் பக்கத்து தோட்டத்தில் அவரது உறவினா் மணிவேல் வசித்து வருகிறாா். இந்நிலையில், மணிகண்டன், மணிவேலின் வங்கிக் கணக்கிற்கு ரூ.10 ஆயிரத்தை அனுப்பி, தனது தந்தையிடம் கொடுக்குமாறு தெரிவித்துள்ளாா். ஆனால், மணிவேல் அந்த பணத்தை கொடுக்கவில்லையாம். இதனிடையே, பணத்தை தரும்படி சின்னக்காளை கேட்டுள்ளாா். இதுதொடா்பாக இருவருக்கும் இடையே திங்கள்கிழமை இரவு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

பின்னா் வெளியில் சென்ற சின்னக்காளை வீடு திரும்பவில்லை. இந்நிலையில், வீரப்புடையான்பட்டியிலுள்ள மதுரைவீரன் கோயில் அருகே காயங்களுடன் சின்னக்காளை சடலமாக செவ்வாய்க்கிழமை காலை கிடந்துள்ளாா். இதுகுறித்து தகவலறிந்த கன்னிவாடி காவல் நிலைய போலீஸாா், சின்னக்காளையின் சடலத்தை கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT