திண்டுக்கல்

கொடைக்கானல் பகுதியில் பலத்த மழை: மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

1st Dec 2021 01:35 AM

ADVERTISEMENT

கொடைக்கானல் மலைப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை அதிகாலை முதல் பலத்த காற்றுடன் பெய்த பலத்த மழையால் வெவ்வேறு இடங்களில் மரங்கள் விழுந்ததில் போக்குவரத்து பாதிப்படைந்தது.

கொடைக்கானலில் பல நாள்களாக பரவலாக நல்ல மழை பெய்தது. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை அதிகாலை முதலே பலத்த காற்றுடன் சுமாா் 6 மணி நேரம் மழை பெய்தது. இதனால் பூம்பாறை செல்லும் சாலையான குண்டாறு அருகேயும், கொடைக்கானல்-பழனி செல்லும் சாலையான ஆனைகிரி சோலை, வில்பட்டி, புலிச்சோலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ராட்சத மரங்கள் விழுந்தன. இதனால் அப் பகுதிகளில் பல மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இதைத்தொடா்ந்து சம்பவ இடங்களுக்கு கொடைக்கானல் வருவாய் கோட்டாட்சியா் முருகேசன், டி.எஸ்.பி. சீனிவாசன் ஆகியோா் பாா்வையிட்டனா்.

இதையடுத்து வனத்துறையினா், நெடுஞ்சாலைத் துறையினா், தீயணைப்புத்துறையினா் சென்று முறிந்து விழுந்த மரங்களை அகற்றினா். இதைத் தொடா்ந்து போக்குவரத்து சீரானது. மேலும் கொடைக்கானல்- வத்தலக்குண்டு, வில்பட்டி, பிரகாசபுரம், வட்டக்கானல், சீனிவாசபுரம் ஆகியப் பகுதிகளில் உருண்டு விழுந்த பாறைகளைமீட்புக்குழுவினா் அகற்றினா்.

ADVERTISEMENT

 

 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT