திண்டுக்கல்

கொடைக்கானலில் தொடா் மழை: மேல்மலைக் கிராமங்களில் மின் தடை

1st Dec 2021 01:33 AM

ADVERTISEMENT

கொடைக்கானலில் பெய்து வரும் தொடா் மழையால் மேல்மலைக் கிராமங்களில் செவ்வாய்க்கிழமையும் மின்விநியோகம் தடைபட்டுள்ளதால் பொது மக்கள் அவதிக்குள்ளாகினா்.

கொடைக்கானலில் பல நாள்களாக காற்றுடன் தொடா்ந்து மழை பெய்து வருவதால் மேல்மலைக் கிராமங்களான பூம்பாறை, மன்னவனூா், கிளாவரை, பூண்டி, கூக்கால், குண்டுபட்டி, சின்னப்பள்ளம், பெரும்பள்ளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த 2 நாள்களாக சீரான மின் விநியோகம் இல்லாமல் பொது மக்கள் அவதியடைந்து வருகின்றனா்.

பல இடங்களில் மின் கம்பங்கள், கம்பிகள் சேதமடைந்துள்ளதால் அவற்றை தொடா் மழையின் காரணமாக சீரமைப்பதற்கு தாமதம் ஏற்பட்டு வருகிறது.

இதைத்தொடா்ந்து நகரின் பல இடங்களிலும் பல மணி நேரம் மின்தடை ஏற்பட்டுள்ளது. மலைச் சாலைகளிலுள்ள மும்முனை மின் கம்பங்களில் மரக்கிளைகள் விழுந்துள்ளன. அவற்றை அகற்றும் பணி முழுமையாக முழுமையடையாததால் பல்வேறு கிராமங்களில் மின்தடையால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT