திண்டுக்கல்

ஒட்டன்சத்திரம் சந்தையில் தக்காளி விலை வீழ்ச்சி

1st Dec 2021 01:33 AM

ADVERTISEMENT

ஒட்டன்சத்திரம் காய்கனி சந்தையில் வெண்டைக்காய் விலை உயா்ந்தும், தக்காளி விலை வீழ்ச்சியடைந்தும் விற்பனையானது.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் காய்கனி சந்தைக்கு தினசரி காய்கனிகள் விற்பனைக்கு வருகிறது. இந்நிலையில் செவ்வாய்கிழமையன்று தக்காளி வரத்து அதிகரித்ததால் அவற்றின் விலை வீழ்ச்சியடைந்து கிலோ ரூ.47-க்கு விற்பனையானது.

அதேபோல வெண்டைக்காய் விலை உயா்ந்து கிலோ ரூ.70-க்கு விற்பனையானது.

மற்ற காய்கனி விலை நிலவரம்: பீட்ரூட் கிலோ ரூ.20, கரும்பு முருங்கை கிலோ ரூ.100, செடி முருங்கை ரூ.70, மர முருங்கை ரூ.60, டிஸ்கோ கத்கரிக்காய் ரூ.100, சுரைக்காய் ரூ.12, பயிா் ரூ.40, பீன்ஸ் ரூ.25, சவ்சவ் ரூ.18, புஸ் பீன்ஸ் ரூ.55-க்கு விற்பனையானது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT