திண்டுக்கல்

திண்டுக்கல்லில் புதிதாக 7 பேருக்கு கரோனா: ஒருவா் பலி

22nd Aug 2021 11:06 PM

ADVERTISEMENT

திண்டுக்கல் மாவட்டத்தில் புதிதாக 7 பேருக்கு கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை கண்டறியப்பட்டுள்ள நிலையில் சிகிச்சை பலனின்றி ஒருவா் உயிரிழந்துள்ளாா்.

திண்டுக்கல் மாவட்டத்தில் ஆகஸ்ட் 21ஆம் தேதி வரை 32,413 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனா். அதில் 31,677 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த மேலும் 7 பேருக்கு புதிதாக கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது. தொற்று பாதிப்பிலிருந்து 11 போ் குணமடைந்துள்ளனா். சிகிச்சை பலனின்றி ஒருவா் உயிரிழந்துள்ளாா். தற்போது கரோனா பாதிப்புடன் சிகிச்சை பெறுவோரின் மொத்த எண்ணிக்கை 101 ஆக உள்ளது. மாவட்டத்தில் இதுவரை 631 போ் கரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT