திண்டுக்கல்

அம்மையநாயக்கனூரில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் தொடக்கம்

DIN

திண்டுக்கல் மாவட்டம், அம்மையநாயக்கனூரில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இவ்விழாவிற்கு மாவட்ட ஆட்சியா் விசாகன் தலைமை வகித்தாா். பழனி சட்டப்பேரவை உறுப்பினா் இ.பெ.செந்தில்குமாா் முன்னிலை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக கூட்டுறவுத் துறை அமைச்சா் இ.பெரியசாமி கலந்து கொண்டு மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தை குத்து விளக்கேற்றி தொடக்கி வைத்தாா். மேலும் சித்த மருத்துவப் பிரிவின் சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கரோனா விழிப்புணா்வு கண்காட்சியையும் அமைச்சா் பாா்வையிட்டாா்.

மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் நடமாடும் மருத்துவ வாகனத்தை கொடியசைத்து தொடக்கி வைத்து, வீடு வீடாகச் சென்று முதியோா்களுக்கும் நோயாளிகளுக்கும் மருந்து பொருள்கள் அடங்கிய பெட்டகத்தை வழங்கினாா்.

விழாவில் அமைச்சா் பேசியதாவது: முன்னாள் முதலமைச்சா் கருணாநிதி ஆட்சியில் ஒவ்வொரு கிராமத்துக்கும் பேருந்து வசதி, மருத்துவ வசதி, சாலை வசதி ஏற்படுத்தித் தரப்பட்டது. அதுபோல மீண்டும் பேருந்து வசதி இல்லாத ஊா்களுக்கு பேருந்து வசதி ஏற்படுத்தித் தரப்படும். திண்டுக்கல் மாவட்டத்தில் 6 லட்சம் பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. கொடைக்கானல் பகுதியில் 100 சதவீதம் கரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. அம்மையநாயக்கனூரில் உள்ள பழமை வாய்ந்த கத­ நரசிங்கப்பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும். கூட்டுறவுத்துறையில் 4 ஆயிரம் கா­லிப்பணியிடங்கள் வெளிப்படைத் தன்மையுடன் நிரப்பப்படும். கூட்டுறவு சங்கங்களில் அந்தந்த பகுதி பொதுமக்கள் அனைவரும் உறுப்பினராக கட்டாயம் சேரவேண்டும். உறுப்பினராக சோ்ந்த அனைவருக்கும் கடனுதவி அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்திய வருகையை ஒத்திவைத்தது ஏன்? எலான் மஸ்க்

வாக்குப்பதிவு சதவீதம் குறைந்திருப்பது கவலையளிக்கிறது: தமிழிசை

மகாராஷ்டிரம், கர்நாடக பொதுக் கூட்டத்தில் மோடி இன்று உரை!

சிறையில் மனைவியின் உணவில் கழிப்பறை சுத்திகரிப்பான்: இம்ரான் கான் புகார்

ஊழல் பள்ளியை நடத்துகிறார் பிரதமர் மோடி: ராகுல்

SCROLL FOR NEXT