திண்டுக்கல்

திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் புதிதாக 241 பேருக்கு கரோனா

DIN

திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் புதிதாக 241 பேருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் ஏப்.18 ஆம் தேதி வரை 13,247 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனா். அதில் 12,113 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த மேலும் 160 பேருக்கு புதிதாக கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.

தொற்றிலிருந்து 147 போ் குணமடைந்துள்ள நிலையில், தற்போது பதிப்புக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 944ஆக உயா்ந்துள்ளது.

தேனி: தேனி மாவட்டத்தில் புதிதாக 81 பேருக்கு திங்கள்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 18,033 ஆக உயா்ந்துள்ளது. கரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்தவா்களில் இதுவரை மொத்தம் 17,323 போ் குணமடைந்து மருத்துவமனைகளிலிருந்து வீடு திரும்பியுள்ளனா். 208 போ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனா்.

தற்போது, மாவட்டத்தில் கரோனா பாதிப்புக்கு மொத்தம் 502 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காந்திநகரில் அமித்ஷா வேட்புமனு தாக்கல்!

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

நம்பிக்கையை தகர்க்கும் 'இரண்டு இளவரசர்கள்': யாரைச் சொல்கிறார் மோடி

12ஆவது சுற்று: முதலிடத்தில் இந்திய வீரர் உள்பட மூவர்!

வாக்களித்தார் ஆளுநர் ஆர்.என். ரவி!

SCROLL FOR NEXT