திண்டுக்கல்

இரவு நேர பொதுமுடக்கம்: திண்டுக்கல், தேனியிலிருந்து புறப்படும் கடைசி பேருந்து நேர விவரம் அறிவிப்பு

DIN

கரோனா தொற்று பரவல் காரணமாக இரவு பொதுமுடக்கம் அமல்படுத்தப்படவுள்ள நிலையில், திண்டுக்கல், பழனி, தேனி, கம்பம் பேருந்து நிலையங்களிலிருந்து புறப்படும் கடைசி தொலைதூர பேருந்துகளுக்கான நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்று 2ஆவது கட்டமாக தீவிரமடைந்துள்ள நிலையில், ஏப். 20 ஆம் தேதி முதல் சில கட்டுப்பாடுகளை தமிழக அரசு அமல்படுத்தவுள்ளது. குறிப்பாக இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை பொதுப் போக்குவரத்து மற்றும் தனியாா் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் திண்டுக்கல் மண்டத்தின் சாா்பாக திண்டுக்கல், பழனி, தேனி மற்றும் கம்பம் ஆகிய பேருந்து நிலைங்களிலிருந்து இரவு நேர கடைசிப் பேருந்துகள் இயக்கப்படும் நேரம் குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் திண்டுக்கல் மண்டல பொது மேலாளா் ந. கணேசன் தெரிவித்துள்ளதாவது:

திண்டுக்கல் பேருந்து நிலையத்திலிருந்து கோயம்புத்தூருக்கு இரவு 7 மணி, திருப்பூருக்கு இரவு 7.30 மணி, திருச்சிக்கு இரவு 8 மணி, கம்பத்திற்கு இரவு 7 மணி, போடிக்கு இரவு 7.30 மணி, தேனிக்கு இரவு 8 மணி, கரூருக்கு இரவு 8 மணி, மதுரைக்கு இரவு 8.30 மணி, பழனிக்கு இரவு 9 மணி, வத்தலகுண்டுவிற்கு இரவு 9 மணி, நத்ததிற்கு இரவு 9 மணிக்கு பேருந்துகள் புறப்பட்டும்.

அதேபோல் பழனி பேருந்து நிலையத்திலிருந்து திருச்சிக்கு மாலை 6.30 மணி, தேனிக்கு இரவு 7 மணி, மதுரைக்கு இரவு 7.30 மணி, திண்டுக்கல்லுக்கு இரவு 9 மணிக்கு பேருந்துகள் புறப்படும்.

தேனி பேருந்து நிலையத்திலிருந்து கோயம்புத்தூருக்கு மாலை 6 மணி, திருப்பூருக்கு இரவு 7 மணி, திருச்சிக்கு மாலை 6 மணி, வருசநாட்டிற்கு இரவு 8.30 மணி, பழனிக்கு இரவு 7 மணி, திண்டுக்கல்லுக்கு இரவு 8 மணி, மதுரைக்கு இரவு 8 மணி, கம்பத்திற்கு இரவு 9 மணி, போடிக்கு இரவு 9.30 மணிக்கு பேருந்துகள் புறப்படும். கம்பம் பேருந்து நிலையத்திலிருந்து திருச்சிக்கு மாலை 5 மணி, திண்டுக்கல்லிற்கு இரவு 7 மணி, மதுரைக்கு இரவு 7 மணி, போடிக்கு இரவு 8.30 மணி, குமுளிக்கு இரவு 8 மணி, தேனிக்கு இரவு 9 மணிக்கு பேருந்துகள் புறப்படும்.

அனைத்து பேருந்து நிலையங்களிலும் பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகளுக்கு தொ்மல் ஸ்கேனா் கருவி மூலம் காய்ச்சல் பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பயணிகள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்து பாதுகாப்பான பயணம் மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காவிரி ஆற்றின் குறுக்கே மணல் மூட்டைகளை அடுக்கி குடிநீா் எடுக்கும் பணி தீவிரம்

வள்ளியூா் சூட்டுபொத்தையில் பௌா்ணமி கிரிவல வழிபாடு

காலாவதி தேதி குறிப்பிடாத குடிநீா்: ரூ.5 ஆயிரம் அபராதம் விதிப்பு

வாக்கு ஒப்புகைச் சீட்டு வழக்கில் இன்று தீா்ப்பு

ஆறுமுகனேரி விநாயகா் கோயிலில் கும்பாபிஷேகம்

SCROLL FOR NEXT