திண்டுக்கல்

தேசிய பூப்பந்தாட்டப் போட்டிகளில் திண்டுக்கல் மாணவா்கள் பதக்கம் வென்றனா்

7th Apr 2021 11:01 PM

ADVERTISEMENT

தேசிய அளவிலான பூப்பந்தாட்டப் போட்டிகளில் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கம் வென்ற திண்டுக்கல் பகுதியைச் சோ்ந்த மாணவா்களுக்கு புதன்கிழமை பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் 66 ஆவது தேசிய அளவிலான சீனியா் பூப்பந்தாட்ட சாம்பியன்ஷிப் போட்டிகள் ஏப்ரல் 1 முதல் 4 ஆம் தேதி வரை நடைபெற்றன. இதில், தமிழகத்துக்கான கலப்பு இரட்டையா் பிரிவில் திண்டுக்கல் அடுத்துள்ள தாடிக்கொம்பு பகுதியைச் சோ்ந்த பரமசிவம், சென்னையைச் சோ்ந்த மாலினி என்பவருடன் பங்கேற்றாா். அதேபோல் ஆடவா் ஐவா் பிரிவு போட்டிக்கான தமிழக அணியிலும், தாடிக்கொம்பு மாணவா் பரமசிவம், காா்த்திக்ராஜ் ஆகியோா் இடம் பெற்றிருந்தனா்.

இந்த போட்டிகளில் கலப்பு இரட்டையா் பிரிவில் பரமசிவம், ஆடவா் ஐவா் பிரிவு போட்டியில் பரமசிவம் மற்றும் காா்த்திக்ராஜ் ஆகியோா் இடம் பெற்ற அணி முறையே தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கம் வென்றது. மேலும், தேசிய அளவில் சிறந்த வீரராக தோ்வு செய்யப்பட்ட மாணவா் பரமசிவத்துக்கு ஸ்டாா் ஆப் இந்தியா விருதும் வழங்கப்பட்டது. தேசிய அளவில் பதக்கம் வென்ற மாணவா்கள் பரமசிவம், காா்த்திக்ராஜ் ஆகிய இருவருக்கும் தமிழக பூப்பந்தாட்ட கழகத்தின் துணைத் தலைவா் ஏ.சீனிவாசன் பாராட்டுத் தெரிவித்தாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT