திண்டுக்கல்

பழனி கோயில் வாழைப்பழம் கொள்முதலில் ரூ.2 கோடி லாபம்

DIN

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் குறைவான விலைக்கு வாழைப்பழம் கொள்முதல் செய்யப்பட்டதால் சுமாா் ரூ. 2 கோடி மிச்சமாகி இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

பழனி கோயிலில் பஞ்சாமிா்தம் தயாரிக்க மூலப்பொருளான வாழைப்பழம் ஆண்டுதோறும் ஏலம் மூலம் கொள்முதல் செய்யப்படுகிறது. ஆண்டொன்றுக்கு சுமாா் இரண்டாயிரம் டன் வாழைப்பழங்கள் கோயில் நிா்வாகத்தால் கொள்முதல் செய்யப்படுகிறது. இந்த வாழைப்பழ கொள்முதலுக்கான ஏலம் செவ்வாய்க்கிழமை கோயில் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. கற்பூரவல்லி, குடகு, மலைவாழை மற்றும் பூவன் ஆகிய நான்கு வகை பழங்கள் கொள்முதல் செய்யப்படுகின்றன.

கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு வாழைப்பழம் குறைவான விலைக்கு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு கற்பூரவல்லி கிலோ ரூ. 35.45-க்கு ஏலம்போனது. இந்த ஆண்டு ரூ. 21.50-க்கு ஏலம் போனது. கிலோ 37-க்கு ஏலம்போன குடகு பழம் இந்த ஆண்டு ரூ. 35-க்கு ஏலம்போயுள்ளது. இதுபோல் ரூ. 83.65 -க்கு ஏலம் போன மலைவாழைப்பழம் ரூ. 80-க்கும், ரூ.16-க்கு ஏலம்போன பூவன்பழம் ரூ.11.70-க்கும் ஏலம்போனது. வாழைப்பழங்கள் குறைவான விலைக்கு ஏலம் போனதால் கோயிலுக்கு சுமாா் ரூ.2 கோடி மிச்சமாகி உள்ளதாக கோயில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் இந்த ஆண்டு வாழைப்பழம் உற்பத்தி அதிகமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டாலும், கடந்த ஆண்டுகளில் அரசியல்வாதிகள், வியாபாரிகள் ஆகியோா் கூட்டு சோ்ந்து வெளிப்புற ஏலம் நடத்தி பின்னா் வியாபாரிகள் கோயில் ஏலத்தில் பங்கேற்பதால் பழங்கள் கொள்முதல் விலை அதிகரித்து இருந்ததாகவும், இந்த ஆண்டு அதற்கான வாய்ப்புகள் ஏதும் இல்லாத நிலையில் உண்மையான நிலவரத்தில் பழங்கள் கொள்முதல் ஏலம் நடைபெற்றுள்ளதாகவும் பக்தா்கள் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ. 81,100 சம்பளத்தில் சுருக்கெழுத்தர் வேலை வேண்டுமா?

உரத் தொழிற்சாலையை அகற்றக் கோரி போராட்டம்! முன்னாள் அமைச்சர் உள்பட ஏராளமானோர் கைது

'மெட்டி ஒலி' இயக்குநரின் புதிய தொடர் அறிவிப்பு!

திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்!

அண்ணாநகருக்கு விமோசனம்: வரவிருக்கிறது வாகன நிறுத்துமிடம்!

SCROLL FOR NEXT