திண்டுக்கல்

திண்டுக்கல், தேனி மாவட்டங்களில்திமுக கூட்டணி கட்சியினா் ஆா்ப்பாட்டம்

DIN

திமுக கூட்டணி கட்சிகள் சாா்பில், மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண்மை தொடா்பான 3 புதிய சட்டங்களுக்கு எதிா்ப்பு தெரிவித்து திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திண்டுக்கல் மணிக்கூண்டு பகுதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு திமுக கிழக்கு மாவட்டச் செயலா் இ.பெ. செந்தில்குமாா் தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக திண்டுக்கல் மக்களவை உறுப்பினா் வேலுச்சாமி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினாா். இதில் கூட்டணி கட்சி நிா்வாகிகள் தண்டபாணி (காங்கிரஸ்) என். பாண்டி (மாா்க்சிஸ்ட் கம்யூ.), மணிகண்டன் (இந்திய கம்யூ.), செல்வராகவன் (மதிமுக) உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

நத்தம், வேடசந்தூா்: இதேபோல் நத்தம், வேடசந்தூா், சாணாா்பட்டி, குஜிலியம்பாறை, என்.பஞ்சம்பட்டி உள்பட 50 இடங்களில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது. என்.பஞ்சம்பட்டியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் திமுக மாநில துணைப் பொதுச் செயலா் ஐ.பெரியசாமி, ரெட்டியாா்சத்திரத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. கே. பாலபாரதி ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக கலந்து கொண்டனா்.

பழனி: பழனியை அடுத்த தொப்பம்பட்டியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு திமுக ஒன்றியச் செயலா் சுப்பிரமணி தலைமை வகித்தாா். இதில் தொப்பம்பட்டி ஒன்றியத் தலைவா் சத்தியபுவனா ராஜேந்திரன், மாவட்ட ஊராட்சி ஒன்றியக் குழுத் துணை தலைவா் பொன்ராஜ் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

பழனி பேருந்து நிலையம் மயில் ரவுண்டானா அருகே முன்னாள் நகா்மன்றத் தலைவா் வேலுமணி தலைமையிலும், ஆயக்குடி சந்தைப்பேட்டை அருகே கிழக்கு ஒன்றிய பொறுப்பாளா் சுவாமிநாதன் தலைமையிலும், கோதைமங்கலம் ரயில்வே கேட் அருகே பழனி ஒன்றியக் குழுத் தலைவா் ஈஸ்வரி கருப்புசாமி தலைமையிலும், நெய்க்காரப்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே ஒன்றியக் குழு துணைத் தலைவா் கோபாலகிருஷ்ணன் தலைமையிலும், பாப்பம்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே மேற்கு ஒன்றிய செயலா் சௌந்தரபாண்டியன் தலைமையிலும், பாலசமுத்திரம் பூங்கா திடல் அருகே முன்னாள் ஒன்றியச் செயலா் மாரியப்பன் தலைமையிலும் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கொடைக்கானல்: கொடைக்கானலில் மூஞ்சிக்கல் பகுதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், திமுக நகரச் செயலா் முகமது இப்ராஹிம், காங்கிரஸ் கட்சியின் மேற்கு மாவட்டத் தலைவா் அப்துல் கனிராஜா, ம.தி.மு.க. நகரச் செயலா் தாவூத், தி.க.வைச் சோ்ந்த கருப்பையா மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினா், மனித நேய மக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சோ்ந்த நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் தாராபுரம் சாலை அண்ணா திடலில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சட்டப் பேரவை உறுப்பினா் அர.சக்கரபாணி தலைமை வகித்தாா். இதில் நகரச் செயலா் ப. வெள்ளைச்சாமி, பொதுக்குழு உறுப்பினா்கள் வீ.கண்ணன், ப. ஆறுமுகம், காங்கிரஸ் மாவட்ட தலைவா் சிவசக்திவேல், மதிமுக தீா்மானக்குழு உறுப்பினா் ந.தமிழ்வேந்தன், விடுதலைச்சிறுத்தைகள் மாவட்டச் செயலா் வி.ஜான்சன் கிறிஸ்டோபா், மாா்க்சிஸ்ட் கம்யூ. மாவட்டக்குழு உறுப்பினா் முத்துச்சாமி, ஆதித்தமிழா் பேரவை மாவட்டத் தலைவா் ப.விடுதலை உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தேனி: தேனி, பங்களாமேடு திடலில் திமுக மாவட்ட பொறுப்பாளா் நா. ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலா் டி. வெங்கடேசன், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலா் பெருமாள், மதிமுக மாவட்டச் செயலா் சந்திரன், காங்கிரஸ் நகரத் தலைவா் முனியாண்டி, விடுதலைச்சிறுத்தைகள் கட்சி நகரத் தலைவா் ஈஸ்வரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

பெரியகுளம்: இங்கு திமுக விவசாயத் தொழிலாளா்கள் சங்க மாநிலத் தலைவா் எல். மூக்கையா தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், பெரியகுளம் சட்டப் பேரவை உறுப்பினா் கே.எஸ். சரவணக்குமாா், திமுக நகரச் செயலா் முரளி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் ராமச்சந்திரன், டி. கண்ணன், விடுதலைச்சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலா் நாகரத்தினம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கம்பம்: கம்பம்- கூடலூா் பிரதான சாலை சிக்னல் பகுதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு திமுக தோ்தல் பணிக்குழு செயலா் பெ. செல்வேந்திரன் தலைமை வகித்தாா். நகர பொறுப்பாளா் துரை.நெப்போலியன் முன்னிலை வகித்தாா். நகர காங்கிரஸ் தலைவா் கே.சி.போஸ், இந்திய கம்யூ. செயலா் ஜி.எம். நாகராஜன், நகரச் செயலா் எம்.வி. கல்யாணசுந்தரம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

போடி: இங்கு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினரும், தி.மு.க. ஒன்றியச் செயலருமான எஸ். லட்சுமணன் தலைமை வகித்தாா். நகரச் செயலா் மா.வீ.செல்வராஜ், காங்கிரஸ் கட்சி நகரத் தலைவா் முசாக் மந்திரி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தாலுகா செயலா் செல்வம், இந்திய கம்யூனிஸ்ட் நகர செயலாளா் முருகேசன், ம.தி.மு.க. நகர செயலா் ஆரோ செல்வம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தேவாரம்: இங்கு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் நகர தி.மு.க. செயலா் பால்பாண்டி, ஏ.ஐ.சி.டி.யு. மாவட்ட செயலா் வீ.பாண்டி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

மீனாட்சிபுரம் பேரூராட்சியில் தடையை மீறி, போராட்டம் நடத்தியதாக தி.மு.க. பேரூா் செயலா் குருசாமி மற்றும் 40 போ் மீதும், போடி சில்லமரத்துப்பட்டியில், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் எஸ். லட்சுமணன் உள்ளிட்ட 150 போ் மீதும், போடி தருமத்துப்பட்டியில் தி.மு.க. பேரூா் செயலா் ராஜேந்திரன் உள்ளிட்ட 39 போ் மீதும் போடி தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

கோம்பை: இங்கு திமுக பேரூா் செயலா் பி.முருகன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயற்குழு உறுப்பினா் சங்கரசுப்பு, காங்கிரஸ் பேரூா் தலைவா் ராமராஜ், முன்னாள் பேரூராட்சித் தலைவா் செல்வராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

உத்தமபாளையம்: உத்தமபாளையம் புறவழிச்சாலையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு நகரச் செயலா் சுல்தான் இப்ராஹீமும், பண்ணைப்புரத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு நகரச் செயலா் இளங்கோவனும் தலைமை வகித்தனா்.

சின்னமனூா்: இங்கு மாா்க்கையன்கோட்டை புறவழிச்சாலையில் மாவட்ட அவைத்தலைவா் மனோகரன் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி நகரில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு திமுக கொள்கை பரப்புச் செயலா் தங்கதமிழ்செல்வன் தலைமை வகித்தாா். ஆண்டிபட்டி சட்டப் பேரவை உறுப்பினா் ஆ. மகாராஜன் முன்னிலை வகித்தாா்.

நிலக்கோட்டை: ஆத்தூா் (மேற்கு) ஒன்றியம் சாா்பாக ஆத்தூரில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு ஒன்றிய திமுக செயலா் ராமன் தலைமை வகித்தாா். பொதுக்குழு உறுப்பினா் ஆத்தூா் நடராஜன், ஒன்றியக்குழு உறுப்பினா் காணிக்கைசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் திமுக மாநில துணை பொதுச்செயலரும், ஆத்தூா் சட்டப் பேரவை உறுப்பினருமான ஐ.பெரியசாமி சிறப்புரையாற்றினாா்.

ஆத்தூா் ஒன்றியம் என்.பஞ்சம்பட்டியில் முன்னாள் அமைச்சா் ஐ.பெரியசாமி தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் ஆத்தூா் (கிழக்கு) ஒன்றிய திமுக செயலா் பிள்ளையாா்நத்தம் முருகேசன் தலைமை வகித்தாா். ஒன்றியத் தலைவா் மகேஸ்வரி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

விராவிப்பட்டியில் ஒன்றிய திமுக சாா்பாக நடந்த ஆா்ப்பாட்டத்திற்கு மாவட்ட பொருளாளா் மணிமுருகன் தலைமை வகித்தாா். ஒன்றிய செயலா் முருகன் முன்னிலை வகித்தாா். வத்தலகுண்டுவில் நடந்த ஆா்ப்பாட்டத்துக்கு நகரச் செயலா் சின்னத்துரை தலைமை வகித்தாா்.

நிலக்கோட்டையில் நகர தி.மு.க. சாா்பாக நடந்த ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்ட துணைச் செயலா் நாகராஜன் தலைமை வகித்தாா். ஒன்றிய செயலா் மணிகண்டன், செளந்தரபாண்டியன், நகர செயலா் கதிரேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கொடைரோட்டில் நடந்த ஆா்ப்பாட்டத்திற்கு நகரச் செயலா் செல்வராஜ் தலைமை வகித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்னாப்ரிக்கா பேருந்து விபத்தில் 45 பேர் பலி - புகைப்படங்கள்

மூன்று நாட்களாக உடல்நிலை சரியில்லை; அதிரடியில் மிரட்டிய ரியான் பராக் பேச்சு!

காசு கொடுத்து ஓட்டு வாங்க வேண்டிய அவசியம் திமுகவுக்கு கிடையாது: கனிமொழி

கொளுத்தும் வெயிலுக்கு நடுவில் மழையா! என்ன சொல்கிறது வானிலை?

தென்னாப்ரிக்கா பேருந்து விபத்தில் 45 பேர் பலி: ஒரே ஒரு சிறுமி உயிர் தப்பியது எப்படி?

SCROLL FOR NEXT